சாய்பல்லவிக்கு பதில் சமந்தா? | காலா திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் ஆகுமா? | ஜி.வி.பிரகாஷ் குமாரின் வேகம் | சினிமா பிரச்னையை தீர்க்க மா.கம்யூனிஸ்ட் முதல்வருக்கு கடிதம் | 'ஏக் தோ தீன்' ரீமிக்ஸ், கடும் எதிர்ப்பு | விஷால் ஜோடியாக ராஷி கண்ணா ? | ஐதராபாத்தில் 'விசுவாசம்' ஷுட்டிங் ? | அனிருத்தை அசரவைத்த புருவ அழகி | இளையராஜா படத்தில் கதாநாயகனாக கின்னஸ் பக்ரு | நாகார்ஜுனாவின் வாய்ப்பு மம்முட்டிக்கு கைமாறியது ஏன்..? |
சாண்டோ சின்னப்பா தேவர், ராம.நாராயணனுக்கு பிறகு தமிழில் விலங்குகளை மையமாக வைத்து படம் எடுப்பது மிகவும் குறைந்து விட்டது. நாய்கள் ஜாக்கிரதை, ஜூலியும் 4 நண்பர்களும் என அவ்வப்போது சில படங்கள் வந்தது.
அந்த வரிசையில் இப்போது முழுக்க முழுக்க ஒரு நாயை ஹீரோவாக நடிக்க வைத்து ஒரு படம் தயாரிக்க இருக்கிறார்கள். உறுமீன் படத்தை இயக்கிய சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். காக்டைல் சினிமாஸ் மற்றும் யுனைடெட் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
ஒரு நாய்க்கும், ஒரு மனிதருக்கும் இடையிலான உறவை மையமாக கொண்ட படம். ஒருவர் மீது மற்றவர் எப்படி அன்பு செலுத்துகிறார்கள், உதவுகிறார்கள் என்பது திரைக்கதை. கேரளாவில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் இது தயாராகிறது.
ஒரிஜினில் நாய் நடிக்கிறது. என்றாலும் படத்தில் கிராபிக்ஸ் பணிகளும் இருக்கிறது. நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.