காலா திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் ஆகுமா? | ஜி.வி.பிரகாஷ் குமாரின் வேகம் | சினிமா பிரச்னையை தீர்க்க மா.கம்யூனிஸ்ட் முதல்வருக்கு கடிதம் | 'ஏக் தோ தீன்' ரீமிக்ஸ், கடும் எதிர்ப்பு | விஷால் ஜோடியாக ராஷி கண்ணா ? | ஐதராபாத்தில் 'விசுவாசம்' ஷுட்டிங் ? | அனிருத்தை அசரவைத்த புருவ அழகி | இளையராஜா படத்தில் கதாநாயகனாக கின்னஸ் பக்ரு | நாகார்ஜுனாவின் வாய்ப்பு மம்முட்டிக்கு கைமாறியது ஏன்..? | வித்தியாசமான கதையை விரும்பும் காஜல் |
நடிகராக மாறிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கைவசம் உள்ள படங்களை எவ்வித குழப்பமும் இல்லாமல் முடித்துக் கொடுத்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமாரின் வேகம் வியக்க வைக்கும்படி உள்ளது.
பாண்டிராஜ் தயாரிப்பில் ஜி..வி.பிரகாஷ் ஏற்கெனவே நடித்து முடித்துள்ள 'செம' ரிலீசுக்கு ரெடியாகியுள்ள நிலையில் 'குப்பத்து ராஜா'வும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப்படங்களை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'ஐங்கரன்', 'சர்வம் தாள மயம்', அடங்காதே ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.
'குப்பத்து ராஜா' படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிந்து விட்டதைத் தொடர்ந்து 'சர்வம் தாள மயம்' படத்தின் படப்பிடிப்பு மேகாலயாவில் நடந்து வந்தது.
இந்நிலையில் மேகாலயாவில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
'மின்சாரக்கனவு', 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' ஆகிய படங்களுக்கு பிறகு ராஜீவ் மேனன் இயக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடிக்கிறார்.
இவர்களுடன் நெடுமுடி வேணு, வினீத் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். மலையாள நடிகர்கள் அதிகம் நடித்திருப்பதால் இப்படத்தை மலையாளத்தில் டப் பண்ணிவெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இசைக்கும் பாடல்களுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து வருகிறார். ஸ்டிரைக் முடிந்ததும் இப்படத்தின் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.