சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான ரகுல் ப்ரீத்தி சிங் | பிக்பாஸ் 2-விலும் கமல்...? | பைரசி டவுன்லோட், முதலிடத்தில் 'பாகுபலி 2' | முகேஷ் அம்பானி, அமீர்கான் இணையும் 'மகாபாரதா' | சொந்த ஊரில் படப்பிடிப்பு | சாய்பல்லவிக்கு பதில் சமந்தா? | காலா திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் ஆகுமா? | ஜி.வி.பிரகாஷ் குமாரின் வேகம் | சினிமா பிரச்னையை தீர்க்க மா.கம்யூனிஸ்ட் முதல்வருக்கு கடிதம் | 'ஏக் தோ தீன்' ரீமிக்ஸ், கடும் எதிர்ப்பு |
ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 'பாகுபலி 2' படம் இந்திய அளவில் அதிக வசூலைக் குவித்து தற்போது வரை முதலிடத்தில் உள்ளது. வசூலில் பல புதிய சாதனைகளை முதன் முதலில் படைத்த 'பாகுபலி 2' படம் பைரசி டவுன்லோடிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இது பற்றி ஆய்வு செய்த ஜெர்மனி நிறுவனம் ஒன்று அந்த தகவலை வெளியிட்டுள்ளது. 'பாகுபலி 2' படத்தை 93 லட்சம் பேர் வரை இணையங்களில் டவுன்லோட் செய்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இரண்டாமிடத்தில் ஹிந்திப் படமான 'ரயீஸ்' படம் 62 லட்சம் முறை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது.
93 லட்சம் முறை டவுன்லோட் என்றாலும், அதை மற்றவர்களுக்குக் 'காப்பி' செய்து கொடுத்த பார்த்தவர்களின் விவரம் இதில் வராது. அந்த 93 லட்சம் முறைக்கும் சராசரியாக ஒரு டவுன்லோடிற்கு டிக்கெட் கட்டணக் கணக்கின்படி 120 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், 11 கோடியே 16 லட்ச ரூபாய் வருகிறது. இந்த டவுன்லோடிற்காக மொபைல் சேவை நிறுவனங்களும், இன்டர்நெட் சேவை நிறுவனங்களும் எவ்வளவு சம்பாதித்திருக்கும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.