காலா திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் ஆகுமா? | ஜி.வி.பிரகாஷ் குமாரின் வேகம் | சினிமா பிரச்னையை தீர்க்க மா.கம்யூனிஸ்ட் முதல்வருக்கு கடிதம் | 'ஏக் தோ தீன்' ரீமிக்ஸ், கடும் எதிர்ப்பு | விஷால் ஜோடியாக ராஷி கண்ணா ? | ஐதராபாத்தில் 'விசுவாசம்' ஷுட்டிங் ? | அனிருத்தை அசரவைத்த புருவ அழகி | இளையராஜா படத்தில் கதாநாயகனாக கின்னஸ் பக்ரு | நாகார்ஜுனாவின் வாய்ப்பு மம்முட்டிக்கு கைமாறியது ஏன்..? | வித்தியாசமான கதையை விரும்பும் காஜல் |
சினிமாவில் உச்சத்தை தொட்டு, பணம், புகழில் உயர்ந்த இடத்துக்கு சென்று வறுமையில் இறந்தவர் சாவித்ரி. அவரது வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக தயாராகி வருகிறது. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாக நடிக்கிறார்.
இவர்கள் தவிர சமந்தா, ஷாலினி பாண்டேவும் நடிக்கிறார்கள். நாக் அஸ்வின் இயக்குகிறார். மைக்கேல் ஜே.மேயர் இசை அமைக்கிறார், டேனி சான்ஸச், லோப்ஸ் இசை அமைக்கிறார்கள். விஜயானந்தி மூவீஸ் தயாரிக்கிறது. தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் தயாராகி வருகிறது.
கடந்த 4 மாதங்களாக நடந்து வந்த இதன் படப்பிடிப்புகள் நேற்று ஐதராபத்தில் நிறைவடைந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினர் சாவித்ரியின் படத்தை அலங்கரித்து வைத்து வணங்கினார்கள். சாவித்ரி வேடத்தில் இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்ரி படத்திற்கு பலர் தூவி வணங்கியபோது அவரும், படப்பிடிப்பு குழுவினரும் கண்கலங்கினார்கள். திங்கள்கிழமை முதல் டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு, எடிட்டிங் பணிகள் நடக்கிறது.
"மறக்க முடியாத அனுபவங்களுடனும் நம்ப முடியாததாகவும் இந்த பயணம் இருந்தது. மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் படப்பிடிப்பிலிருந்து திரும்பினேன், இயக்குனர் நாக் அஸ்வினும், தயாரிப்பாளரும் என் மீது நம்பிக்கை வைத்து இத்தனை பெரிய பொறுப்பு கொடுத்தற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திரும்பி பார்க்கிறபோது பெருமை தருவதாக இருக்கும் பணி இது. சாவித்ரியை தியேட்டரில் பார்க்க உங்களைப் போன்று நானும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்" என்று தனது டுவிட்டரில் எழுதியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.