சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான ரகுல் ப்ரீத்தி சிங் | பிக்பாஸ் 2-விலும் கமல்...? | பைரசி டவுன்லோட், முதலிடத்தில் 'பாகுபலி 2' | முகேஷ் அம்பானி, அமீர்கான் இணையும் 'மகாபாரதா' | சொந்த ஊரில் படப்பிடிப்பு | சாய்பல்லவிக்கு பதில் சமந்தா? | காலா திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் ஆகுமா? | ஜி.வி.பிரகாஷ் குமாரின் வேகம் | சினிமா பிரச்னையை தீர்க்க மா.கம்யூனிஸ்ட் முதல்வருக்கு கடிதம் | 'ஏக் தோ தீன்' ரீமிக்ஸ், கடும் எதிர்ப்பு |
துப்பறிவாளன் படத்தை அடுத்து மிஷ்கின் இயக்கும் படத்தில் சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த செய்தி. இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார் என்ற தகவலும் சில நாட்களுக்கு முன் வெளியானது.
'லிப்ரா புரொடக்ஷன்ஸ்' என்ற படநிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்டிரைக் முடிந்ததும் துவங்குகிறது. இந்த படத்திற்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நித்யா மேனன் ஒரு கதாநாயகியாக நடிக்கிறார்.
'மெர்சல்' படத்துக்குப் பிறகு நித்யா மேனன் நடிக்கும் படம் இது. இந்த படத்தில் இன்னொரு கதாநாயகி கேரக்டரும் உண்டாம்! இந்த கேரக்டரில் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடந்தது. முதலில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று சொன்ன சாய்பல்லவி அதன் பிறகு கதையைக் கேட்காமலே பெரிய சம்பளம் கேட்டிருக்கிறார். எனவே சாய்பல்லவி என் படத்துக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் மிஷ்கின். அந்த வேடத்தில் நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.