காலா திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் ஆகுமா? | ஜி.வி.பிரகாஷ் குமாரின் வேகம் | சினிமா பிரச்னையை தீர்க்க மா.கம்யூனிஸ்ட் முதல்வருக்கு கடிதம் | 'ஏக் தோ தீன்' ரீமிக்ஸ், கடும் எதிர்ப்பு | விஷால் ஜோடியாக ராஷி கண்ணா ? | ஐதராபாத்தில் 'விசுவாசம்' ஷுட்டிங் ? | அனிருத்தை அசரவைத்த புருவ அழகி | இளையராஜா படத்தில் கதாநாயகனாக கின்னஸ் பக்ரு | நாகார்ஜுனாவின் வாய்ப்பு மம்முட்டிக்கு கைமாறியது ஏன்..? | வித்தியாசமான கதையை விரும்பும் காஜல் |
தமிழ் திரையுலகினர் நடத்தி வரும் போராட்டத்தால் திரையுலகம் ஸ்தம்பித்து உள்ளது. இந்தபோராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன், முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
தமிழ் திரையுலகம் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டத்தால் இத்துறையில் நேரடியாக பணியாற்றும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள், கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மறைமுகமாக மேலும் சில லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. 25 சதவிகிதம் உள்ள போது, 8 சதவித கேளிக்கை வரி வசூலிப்பது கூடுதல் சுமையாக அவர்கள் கருதுகின்றனர். கேரளத்தில் ஜி.எஸ்.டி. மட்டுமே வசூலிக்கப்படுகிறது, கேளிக்கை வரி வசூலிக்கப்படவில்லை.
கடந்த பத்தாண்டுகளாக கியூப், யூ.எப்.ஓ என புதிய தொழில்நுட்பம் சார்ந்து இயங்குவதை, சிலர் பயன்படுத்திக் கொண்டு பணம் சம்பாதிப்பது பெரும் பிரச்சினையை உருவாக்குகிறது. இதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். இதனால், குறைந்த செலவில் படம் தயாரிப்பவர்கள், சினிமா துறையிலிருந்து வெளியேற்றப்படும் சூழ்நிலை நிலவுகிறது.
தமிழ்த்திரை உலகம் மிகுந்த தொழில் நெருக்கடியில் சிக்கியிருப்பதால், கந்துவட்டிக் கடனால் தமிழ்த் திரைப்பட உலகம் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதை கவனத்தில் கொண்டு, தயாரிப்பாளர்களுக்கு நியாயமான வட்டியில் கடன் கிடைக்க அரசு உதவ வேண்டும். தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சி கழகம் போன்ற அமைப்பை அரசு உருவாக்க வேண்டும்
திரையரங்கு கட்டணங்களை குறைவாகவும் ஓரே சீராகவும் இருப்பதை அரசு உறுதி செய்வதோடு, இதை மீறுபவர்கள் மீது அரசு விழிப்போடு இருந்து தடுத்திட வேண்டும்.
திரைத்துறை சார்ந்த இந்தப் பிரச்சினைகளில் தமிழக அரசு அவசரமாக தலையிட்டு, பொருத்தமான தீர்வு காண வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.