சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான ரகுல் ப்ரீத்தி சிங் | பிக்பாஸ் 2-விலும் கமல்...? | பைரசி டவுன்லோட், முதலிடத்தில் 'பாகுபலி 2' | முகேஷ் அம்பானி, அமீர்கான் இணையும் 'மகாபாரதா' | சொந்த ஊரில் படப்பிடிப்பு | சாய்பல்லவிக்கு பதில் சமந்தா? | காலா திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் ஆகுமா? | ஜி.வி.பிரகாஷ் குமாரின் வேகம் | சினிமா பிரச்னையை தீர்க்க மா.கம்யூனிஸ்ட் முதல்வருக்கு கடிதம் | 'ஏக் தோ தீன்' ரீமிக்ஸ், கடும் எதிர்ப்பு |
வடமாநில சேனல்களில் பிரபலமாக திகழ்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி முதன்முறையாக தமிழில் கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பானது. ஒரே வீட்டில் எந்த வெளித்தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் இருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது சிறப்பு அம்சம்.
கடந்த சீசனில், ஓவியாவின் குறும்புத்தனம், ஆரவ் உடன் காதல், காயத்திரி ரகுராம் கெட்டவார்த்தை பேசியது, ஜல்லிக்கட்டு புகழ் ஜூலியின் நாடகத்தனம், சினேகனின் கட்டிப்பிடி என சுவாரஸ்யமும், சர்ச்சையுமாக நிகழ்ச்சி களை கட்டியது. போட்டியின் இறுதியில் ஆரவ் வெற்றி பெற்றார்.
இதன் இரண்டாவது சீசன் விரைவில் ஆரம்பமாக உள்ளது. அதற்கான பணிகள் துவங்கியுள்ளன. முதல் சீசனின் கமல் தொகுத்து வழங்கியதால் அந்த நிகழ்ச்சி தமிழ்நாடு முழுக்க பிரபலமானது. கமல் அரசியலில் களமிறங்கிவிட்டதால் இரண்டாவது சீசனில், அவர் பங்கேற்க மாட்டார் என செய்தி வந்தது. இதனால் அரவிந்த்சாமி அல்லது சூர்யா ஆகிய இருவரில் ஒருவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் பிக்பாஸ் 2-வையும் கமலே தொகுத்து வழங்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அரசியலில் களமிறங்கி இருக்கும் கமல், இந்த நிகழ்ச்சி மூலம், சமூகம் சார்ந்த விஷயங்களை அதிகமாக எடுத்துரைத்தால், இன்னும் மக்கள் மத்தியில் நேரடியாக போய் சேர முடியும் என நம்புகிறார். ஆகையால் பிக்பாஸ் சீசன்-2வையும் தொடர இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுப்பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.