சென்னை:''எய்ம்ஸ் மருத்துவமனை, தமிழகத்தில், எந்த இடத்தில் வந்தாலும், அது, நமக்கு பயனுள்ளதாக இருக்கும். எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டும் என்பது தான், நம் நோக்கம்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்: எதிர்க்கட்சி துணைத் தலைவர், துரைமுருகன்:
மத்திய அரசு, 2015 பட்ஜெட்டில், ஆறு மாநிலங்களில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை துவக்கப்படும் என, அறிவித்தது. அதில்,
தமிழகமும் ஒன்று. தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. பிரதமருக்கு, முதல்வர் எழுதிய கடிதத்தில், 'தஞ்சாவூர், செங்கிப்பட்டியில் அமைக்கலாம்' என, குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் பழனிசாமி:
எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டும் என்பது தான், நம் குறிக்கோள். ஐந்து இடங்களை மத்திய குழுவினர் பார்த்தனர். ஒவ்வொரு இடத்திலும், ஒரு குறைபாட்டை கூறினர். ஈரோட்டில், 'நடுவில் சாலை செல்கிறது' என்றனர். மதுரையில்,'இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் குழாய் செல்கிறது. அதனால், அங்கு அமைக்க முடியாது'என்றனர்.
இப்படி, ஒவ்வொரு காரணத்தை கூறி, நமக்கு வரும் வாய்ப்பை
தட்டி கழித்து விடுவரோ என்று கருதியே, 'செங்கிப்பட்டியில், ஒரே இடத்தில்,
300 ஏக்கர் நிலம்
உள்ளது; அங்கு அமையுங்கள்' என்றோம். அதையும் பரிசீலித்து கொண்டிருக்கின்றனர்.
துரைமுருகன்: நாங்களும், அதே கருத்தையே வலியுறுத்துகிறோம். எனினும், மதுரையில் அமையாவிட்டால், அந்த அமைச்சர் நிலை என்னவாகும் என்பது தான் தெரியவில்லை.
முதல்வர் பழனிசாமி: நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம்; எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த முயல வேண்டாம்.இவ்வாறு விவாதம் நடந்தது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து