சென்னை:''மத்திய அரசிடம், 15வது நிதி ஆணையத்தின் அதிகார வரம்பை, முழுமை யாக ஏற்க முடியாது என, வலியுறுத்தி வருகிறோம்,'' என்று, துணை முதல்வர், பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின்:
மத்திய அரசின், 15வது நிதி ஆணையத்தின் அதிகார வரம்பு, மாநில அரசின் உரிமைகளை
ஆணையம் அமைப்பதற்கான அறிவிக்கை, 2017 நவ.,
27ல் வெளியிடப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைகள், 2020 ஏப்., 1 முதல்,
2025 மார்ச், 31 வரை அமலில்இருக்கும்.கடந்த கால நிதி ஆணையங்களை போல இல்லாமல், இந்த நிதி ஆணையத்திற்கான, அதிகார வரம்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில், மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைகள், 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில், நிதிப் பகிர்வை மேற்கொள்ள வழிவகுக்கிறது.தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்கள், மக்கள் தொகையை, சிறப்பான முறையில் கட்டுப்படுத்தி உள்ளன. மக்கள் தொகையை கட்டுப்படுத்த, எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மாநிலங்கள், கூடுதல்நிதி உதவி பெறும் வகையில், அதிகார வரம்பு உள்ளது. இதை, தமிழகம் கடுமையாக எதிர்க்கிறது.
இது தவிர, முதல் முறையாக, மத்திய நிதிக்குழு பரிந்துரைகளில், செயல் அடிப்படையிலான ஊக்கத் தொகை வழங்க, சில காரணிகளை சேர்த்து உள்ளனர். இதன்படி, பின்தங்கிய மாநிலங்களுக்கு,
அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. பொருத்தமற்ற காரணிகளை, நிதி ஆணையத் தின் அதிகார வரம்பிற்குள் கொண்டு வந்து இருப்பது, ஒரு தவறான முயற்சி என, தமிழகம் கருதுகிறது.
எனவே, தேவையற்ற ஷரத்துகள் நீக்கப்பட வேண்டும். நியாயமான முறையில், நிதிப் பகிர்வு கணிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து