வருத்தத்தில் மோகன்லால் பட நாயகி | புரபெசர் டிங்கன் : ரீ-ஷூட் பண்ணும் திலீப் | ஸ்டிரைக்கிற்கு பிறகே பட வேலை ஆரம்பம் : ரவிகுமார் | கர்நாடக நாற்காலிக்காக நாடகம் : கமல் | தியேட்டர் உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ் | மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ஹாரர் படம் 'நீலி' | இரும்புத்திரை தள்ளிவைப்பு | 'சாமி-2' சென்ட்டிமென்ட் | விசுவாசத்தில் இடம்பெற்ற கெபா ஜெரோமி | சுந்தரபாண்டியன் 2 - என்ன குழப்பமோ? |
கமல் நடித்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக முக்கிய வேடத்தில் நடித்தவர் நிவேதா தாமஸ். அதன் பிறகு தெலுங்கில் இருந்து கதாநாயகி வாய்ப்பு கிடைக்க ஜென்டில்மேன், நின்னுகோரி, ஜெய் லவகுசா உள்பட சில படங்களில் நடித்தார்.
2017 அக்டோபருக்கு பிறகு தான் முக்கிய தேர்வெழுதப்போவதாக சொல்லிக்கொண்டு புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்த நிவேதா தாமஸ், கடந்த 6 மாதங்களாக எந்த படத்தில் கமிட்டாகவில்லை.
இந்நிலையில், தற்போது மீண்டும் அவர் கேமரா முன்பு வந்திருக்கிறார். ஷாப்டம் என்ற தெலுங்கு படத்தில் நாரா ரோஹித்துக்கு ஜோடியாக கமிட்டாகி நடித்து வருகிறார் நிவேதா.