வாஷிங்டன்: பிரிட்டனைச் சேர்ந்த, 'கேம்பிரிட்ஜ் அனாலிடிகா' நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டதில், 'பேஸ்புக்' பயன்படுத்தும், ஐந்து கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதை, அதன் நிறுவனர், மார்க் ஜூக்கர்பெர்க் ஒப்புக் கொண்டுள்ளார்; அதற்காக, அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
அமெரிக்காவில், 2014ல், அதிபர் தேர்தல் நடந்தது. அப்போது, தற்போதைய அதிபர், டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக, பிரிட்டனைச் சேர்ந்த, 'கேம்பிரிட்ஜ் அனாலிடிகா' நிறுவனம், தேர்தல் பணிகளை மேற்கொண்டது. இதற்காக, சமூக வலைதளமான, பேஸ்புக்கில் உள்ள, ஐந்து கோடி பேரின் தகவல்களை, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக, பிரபல பிரிட்டன், 'டிவி' சேனல், 'நியூஸ் 4' செய்தி வெளியிட்டது.
இந்த விஷயத்தில், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன், பேஸ்புக் நிறுவனம் இணைந்து செயல்பட்டதாகவும், அந்த செய்தியில் கூறப்பட்டது. இந்த செய்தியால், பேஸ்புக் நிறுவனம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்நிறுவனத்தின் பங்குகள், இதுவரை இல்லாத அளவில் சரிவை சந்திதுள்ளன. பேஸ்புக் நிறுவனர், மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் சரிந்தது.
அமெரிக்கா மட்டுமின்றி, ஜெர்மனி உட்பட, பல ஐரோப்பிய நாடுகளிலும் நடந்த தேர்தல்களில், அனாலிடிகா நிறுவனம், இதே போன்ற முறை கேடுகளை நடத்தியுள்ளதும் அம்பலமாகி
உள்ளது.
இந்தியாவிலும்,
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 'பேஸ்புக் நிறுவனம், விதிகளை மீறி
செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; தேவைப்பட்டால், பேஸ்புக்
நிறுவனர், மார்க் ஜூக்கர்பெர்கிற்கு, 'சம்மன்' அனுப்பப்படும்' என, மத்திய
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத், நேற்று முன்தினம்
தெரிவித்தார்.
மேலும்,'காங்., தலைவர், ராகுல், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன் இணைந்து, 2019 லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டு உள்ளார்' என, பா.ஜ., பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தவறு நடந்துள்ளதை, பேஸ்புக் நிறுவனர், மார்க் ஜூக்கர்பெர்க் ஒப்புக் கொண்டுள்ளார். தன், 'பேஸ்புக்' பக்கத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில், முக்கிய தகவலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மக்கள் அளிக்கும் தகவல்களை பாதுகாக்கும் பொறுப்பு, எங்களுக்கு உள்ளது; அதை சரியான முறையில் செய்யாவிடில்,மக்களுக்கு சேவை செய்ய முடியாது. விபரங்கள் எப்படி பெறப்பட்டு, அதை எவ்வாறெல்லாம் பயன்படுத்தினர் என்பது குறித்து, விசாரணை நடந்து வருகிறது. எதிர்காலத்தில், இது போன்ற தவறுகள் நடக்கக் கூடாது என்பதில், உறுதியாக உள்ளேன். இதற்கான நடவடிக்கையை முன்கூட்டியே எடுத்துள்ளோம்.
மன்னிப்பு
நாங்கள் சில தவறுகளையும் செய்துள்ளோம். அதை திருத்திக் கொள்ள வேண்டும். பேஸ்புக் நிறுவனர் என்ற முறையில்,தவறுகளுக்கு பொறுப்பேற்று, மன்னிப்பு கேட்கிறேன். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம்.அமெரிக்காவில், இந்த ஆண்டு நவம்பரில் நடக்கும் தேர்தலில் தலையிட மாட்டோம். அது போலவே, இந்தியா, பிரேசில் உட்பட, எந்த நாடுகளிலும் நடக்கும் தேர்தல்களிலும் தலையிடமாட்டோம்.
எந்த ஒரு நிறுவனத்துடனும் இணைந்து, பேஸ்புக் செயல்படாது. பேஸ்புக்கில் கணக்கு வைத்து உள்ள, எந்த ஒரு பயனாளி யின் விபரங் களும், வெளியாகாமல் பாதுகாப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ஜ., புகார்; காங்., மறுப்பு
குஜராத் சட்டசபை தேர்தலில், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் சேவையை, காங்., பயன்படுத்தியதாக, பாஜ., குற்றம் சாட்டி யுள்ளது; இதை, காங்., மறுத்துள்ளது.பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சருமான, ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: குஜராத் சட்டசபை தேர்தலில், அனாலிடிகாவின் சேவையை, காங்., தலைவர், ராகுல் பயன்படுத்தியுள்ளார். அந்த தேர்தலில், ராகுலின் சமூக வலைதள பிரசாரங்கள் அனைத்தையும், அனாலிடிகா நிறுவனமே கவனித்தது.
அனாலிடிகா நிறுவனத்துடனான ராகுலின் தொடர்பு, ஐந்து மாதங்களுக்கு முன் தெரிய வந்தது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு மறுப்பு தெரிவித்து, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சசிதரூர் கூறுகையில், ''அனாலிடிகா நிறுவனத் துடன், காங்கிரசுக்கு எந்த தொடர்பும், எப்போதும் இருந்ததும் இல்லை. ஆதாரமில்லா மல், பா.ஜ., குற்றம் சாட்டுகிறது. மத்திய அமைச்சர் ஒருவரே, இப்படி பொய் சொல்வது, அதிர்ச்சி அளிக்கிறது,'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (4+ 11)
Reply
Reply
Reply
Reply