வருத்தத்தில் மோகன்லால் பட நாயகி | புரபெசர் டிங்கன் : ரீ-ஷூட் பண்ணும் திலீப் | ஸ்டிரைக்கிற்கு பிறகே பட வேலை ஆரம்பம் : ரவிகுமார் | கர்நாடக நாற்காலிக்காக நாடகம் : கமல் | தியேட்டர் உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ் | மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ஹாரர் படம் 'நீலி' | இரும்புத்திரை தள்ளிவைப்பு | 'சாமி-2' சென்ட்டிமென்ட் | விசுவாசத்தில் இடம்பெற்ற கெபா ஜெரோமி | சுந்தரபாண்டியன் 2 - என்ன குழப்பமோ? |
ஸ்பைடர் படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு சினிமாவில் தனது மார்க்கெட் எகிறும் என்று நம்பிக்கை வைத்திருந்த ரகுல் பிரீத் சிங்கிற்கு அந்தப்படம் தோல்வி அதிர்ச்சியை அளித்தது. இதனால் விஜய் 62 பட வாய்ப்பையும், தெலுங்கில் மகேஷ் பாபு பட வாய்ப்பையும் கைப்பற்ற நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனால் தான் தமிழ், தெலுங்கில் எதிர்பார்த்தபடி படங்கள் கிடைக்காமல் ஹிந்திக்கு சென்று நடித்து வருகிறார் ரகுல் பிரீத் சிங். இருப்பினும் தமிழ், தெலுங்கில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விடவேண்டு என்று நினைக்கும் அவர், தனக்கான பட வாய்ப்புகளை கைப்பற்ற தானே களத்தில் இறங்கி தயாரிப்பாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.