சுத்தமாகும்! தமிழக கோவில்களில் கடைகள் இனி இருக்காது Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழக கோவில்கள் ,கோவில் கடைகள்,மதுரை உயர் நீதிமன்றம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தமிழக அறநிலையத்துறை ,
Tamil Nadu Temples, Temple Shops, Madurai High Court, Madurai Meenakshi Amman Temple,

மதுரை : 'தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 36 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் உள்ள குளங்கள், மண்டபங்கள் மற்றும் பிரகாரங்களை நன்றாக பராமரிக்க வேண்டும். வணிக நோக்கிலான கடைகளை அகற்ற, அறநிலையத்துறை செயலர், ஆணையர், எட்டு வாரங்களில், சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதை நிறைவேற்றத் தவறும் அலுவலர்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், கோவில் வளாகங்கள் இனி, சுத்தமாகும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

தமிழக கோவில்கள் ,கோவில் கடைகள்,மதுரை உயர் நீதிமன்றம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தமிழக அறநிலையத்துறை ,
Tamil Nadu Temples, Temple Shops, Madurai High Court, Madurai Meenakshi Amman Temple,


மதுரை, மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில், பிப்ரவரி, 2ல், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், மண்டபத்தின் மேற்கூரை மற்றும் பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. கோவிலில் இருந்த, ஏராளமான கடைகளும் எரிந்து சாம்பலாகின. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இருக்கும் கடைகள் அனைத்தும், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி அகற்றப்பட்டன.


நோட்டீஸ்

இதற்கிடையில், மீனாட்சி அம்மன் கோவிலை தொடர்ந்து, கும்பகோணம், வேலுார் உட்பட, மேலும் சில நகரங்களில் உள்ள கோவில் களிலும் அடுத்தடுத்து தீ விபத்துகள் ஏற்பட்டன. இதனால், தமிழகம் முழுவதும், கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றும்படி,
அதன் உரிமையாளர்களுக்கு, அறநிலைய துறை, 'நோட்டீஸ்' அனுப்பியது.

திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் அடிவாரத்தில், மங்கம்மாள் சத்திரத்தில் உள்ள கடைகளை காலி செய்யும் படி, அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ஏழு பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

வேதனை


இந்த மனுக்களை தள்ளுபடி செய்து,நீதிபதி, எஸ்.எம்.சுப்பிரமணியம் நேற்று பிறப்பித்த
உத்தரவு: கடவுளை வழிபடவும், அமைதியை தேடியும், கோவில்களுக்கு பக்தர்கள் செல்கின்றனர். கோவில்களில் நிலவும் சூழ்நிலை, மன வேதனை தருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தால், பாரம்பரிய சின்னங்கள் சேதமடைந்தன. இது, வணிக நோக்கிலான செயல்பாடுகளை அனுமதித்ததற்கு, மோசமான முன்னுதாரணம்.


தனியார் கோவில்களில் நிர்வாகங்கள் சிறப்பாக உள்ளதாகவும், அறநிலையத்துறை கோவில்கள், பக்தர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப இல்லை எனவும், நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்து உள்ளது. அறநிலையத்துறை கட்டுப் பாட்டில், 36 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் உள்ள குளங்கள், மண்டபங் கள், பிரகாரங்களை நன்றாக பராமரிக்க வேண்டும்.


தள்ளுபடி


வணிக நோக்கிலான கடைகளை அகற்ற, உரிய அதிகாரிகளுக்கு, அறநிலையத்துறை செயலர் மற்றும் ஆணையர், எட்டு வாரங்களில், வழி காட்டுதல்களுடன் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதை நிறைவேற்ற தவறும் அலுவலர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றும் வகையில், அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகின்றனர்.


இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள கோவில் களில் செயல்படும் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டு, கோவில் வளாகங்கள் சுத்தமாகும் என்ற நம்பிக்கை, பக்தர்கள் மத்தியில் உருவாகி உள்ளது.


காலி செய்வது கொள்கை முடிவு


'கோவில்களில் உள்ள கடைகளை, காலி செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற கிளை நேற்று உத்தரவிட்ட நிலையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், திருநெல்வேலி நெல்லையப்பர் உட்பட, பல கோவில்களில் உள்ள கடைகளை காலி செய்ய, அறநிலையத்துறை ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.


உடன், அங்குள்ள கடைகளின் உரிமையாளர் கள், 'மாற்று இடம் வழங்க வேண்டும்; நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 'கடைகளை காலி செய்யக்கூடாது' என, இடைக்கால உத்தரவிட்டிருந்தார்.இந் நிலையில், இந்த மனு நேற்று மீண்டும், நீதிபதி பாரதிதாசன் முன், விசாரணைக்கு வந்த போது, அறநிலையத் துறை ஆணையர், பதில் மனு தாக்கல் செய்தார்.


அதில், 'கோவில்களில் உள்ள கடைகளை காலி செய்வது, அரசின் கொள்கை முடிவு. சில கோவில்கள் தவிர, பெரும்பாலான கோவில் களில், மாற்று இடம் இல்லை. மனுதாரர் களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு வழக்கமான சட்டம், விதிமுறைகள் பொருந்தாது' என, தெரிவித்தார். மனுதாரர்கள் தரப்பு வக்கீல்களும் வாதிட்டனர். பின், விசாரணையை இன்றைக்கு, நீதிபதி ஒத்திவைத்தார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (37+ 30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - koodal,இந்தியா
23-மார்-201814:16:53 IST Report Abuse

வல்வில் ஓரிகூம்பு குழாய் ஒலி பெருக்கியை விற்பனை , பழுது பார்த்தல்...போன்ற அனைத்தையும் இந்திய முழுமைக்கும் தடை செய்யணும்.... ஒலி மாசு குறையும்......

Rate this:
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
23-மார்-201813:28:36 IST Report Abuse

Amar Akbar Antonyகோயிலுக்கு செல்லும் எல்லாருக்கும் பலனுண்டா? கோயிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் பலன் கிடைக்கிறதா என்றால் ஓரளவுக்கு கிடைக்கிறது. காரணம், திரிகரணசுத்தியுடன் இறைவனை யாரும் வணங்குவதில்லை. திரிகரணசுத்தி என்றால் என்ன? மனிதனுக்கு பொறாமை, கோபம், ஆசை, பகை முதலிய குணங்கள் உள்ளன. இவற்றை தியானம் என்ற தீர்த்தத்தாலும், பொய், கோள்மூட்டுதல், தீயசொல் ஆகியவற்றை ஸ்லோகங்கள், பாடல்கள் உள்ளிட்ட துதி என்னும் தீர்த்தத்தாலும், களவு, கொலை, பிறன்மனை காணுதல் ஆகிய அழுக்குகளை அர்ச்சனை என்ற தீர்த்தத்தாலும் கழுவ வேண்டும். இதுவே திரிகரணசுத்தி எனப்படுகிறது. இவற்றையெல்லாம் கழுவாமல், ஆயிரங்களையும், லட்சங்களையும் கொட்டி பூஜை செய்வதால் பயனேதும் இருக்காது. எல்லாரும் பலனடைய வேண்டுமானால் திரிகரணசுத்தி செய்யுங்கள்.

Rate this:
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
23-மார்-201813:22:05 IST Report Abuse

Amar Akbar AntonyThiru. Balakrishnan well written. Nothing to say more. Self discipline, in and out of living space and the cleanliness etc.. good. One of the great messages.

Rate this:
23-மார்-201812:26:33 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்கோவில் போகும் வழியிலேயே இன்று பல கடைகள் விரிக்கப்பட்டு கோவில் எங்கே என்று தேட வேண்டியுள்ளது , திருவானைக்காவல், மலைக்கோட்டை கோவிலுக்கு செல்லும் வழியை பாருங்கள் ஒற்றையடிப்பாதையாக மாறி இருக்கிறது. இதில் கோவிலுக்கு உள்ளேயே கடையை பரப்பினால் எப்படி ஒரு மனதின் நிம்மதியாக சாமி கும்பிடுவது. மார்க்கெட்டில் விற்கவேண்டிய சாமான்கள் அனைத்தும் கோவிலுக்குள் விற்கப்படுகிறது , பாத்திர பண்டங்கள் , அருவாமனை முதற்கொண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் விற்பதை பார்த்தேன்.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-மார்-201814:01:06 IST Report Abuse

தமிழ்வேல் ஜனங்கள் வரும் இடத்தில் கடை விரித்தால்தான் அவர்களுக்கு வியாபாரம் நடக்கும்... அவர்களுக்கென்று ஒரு இடத்தை ஏற்பாடு செய்துவிட்டு காலி செய்ய சொல்ல வேண்டும். அதற்கும் முன் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்....

Rate this:
kumarkv - chennai,இந்தியா
23-மார்-201812:19:56 IST Report Abuse

kumarkvThe shops around the Mylapore temple tank, especially ones in North mada Street, mostly run by Muslims should be removed. We need vege and flower shops, but not the shops run by Muslims.

Rate this:
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
23-மார்-201811:56:57 IST Report Abuse

Tamilanஇந்திய அரசியல் சட்ட அமைப்புகளின் தொல்சிகளில் இதுவும் ஒன்று. தவறு செய்பவர்களை அடையாளம் கண்டுகொண்டால் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமுடியாமல் அனைவரையும் அடக்கி ஆள்வது அரசுகள் போடும் சட்டங்கள் முதல்கொண்டு கோர்ட்டுகள் தீர்ப்புக்குகளும் அமைவது அரசியல்சட்டத்தின் படுதோல்வியைத்தான் உணர்த்துகிறது என்பது இனியும் அரசியல் சட்ட மூடர்களுக்கு புரியாததுதான் வேடிக்கை.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
23-மார்-201811:28:03 IST Report Abuse

ganapati sbகோயில்கள் நமது தாத்தாக்களான ரிஷிகளும் சித்தர்களும் அருளாளர்களும் கூறிய வாக்குக்கிணங்க நமது அரசர்கள் ஆளுமையோடு கருணையோடு நமக்காக அமைத்த தொடர்ந்து பல்கலைகள் வளர்க்கும் அருளை கொடுக்கும் பொக்கிஷங்கள் .நாத்திக திருடர் கலகங்கள் கையிலிருந்து அந்நிய தேச கைக்கூலிகளிடமிருந்து காத்து இவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு நமக்கு உள்ளது . அப்போது தான் நமது பேரப்பிள்ளைகள் நமது தாத்தாக்கள் வைத்தமாநிதியை தொடர்ந்து அனுபவித்து பயன்படுத்தி அவர்களின் வாழ்வில் அமைதி ஆனந்தத்தை தக்க வைக்க முடியும் .

Rate this:
Raji - chennai,இந்தியா
23-மார்-201810:38:45 IST Report Abuse

Rajiசாமி இல்ல , பூதம் இல்ல , இது பெரியார் பன்னு, சிலையை உடைப்போம் கோவிலை இடிப்போம் னு சொல்லி கொண்டு நாத்தீகம் பேசுபவர்கள் தான் கோவில் சொத்துக்களை கொள்ளை அடிக்கிறான் , சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்துகிறான் விநாயகர் சிலை தன் தெரு வழியாக வர கூடாது என்று தடுத்த இஸ்லாமியன் பல கோவில்களில் கடை வைத்து பிழைப்பு நடத்துகிறான் , திராவிட சாக்கடைகளை ஒழித்தால் தான் தமிழக கோவில்களை காப்பாற்ற முடியும்

Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
23-மார்-201810:34:00 IST Report Abuse

raghavanநீதிமன்றத்துக்கு நன்றி. அப்படியே, கோவிலுக்குள் கலாச்சார சீரழிவை ஊக்குவிக்கும், சீரியல் மற்றும் சினிமா படப்பிடிப்புகளையும் தடை செய்து உத்தரவு போடவேண்டும்...

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
23-மார்-201808:43:15 IST Report Abuse

balakrishnanநல்ல விஷயம் தான், பாராட்டலாம், அதேபோல கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் யாரிடம் இருக்கிறது, ஆக்கிரமிப்பில் எவ்வளவு இடம் இருக்கிறது, கோயிலுக்கு சொந்தமான இடங்களில் பல ஆண்டுகாலமாக சொற்ப வாடகையில் கடைகளை நடத்தி வருபவர்கள் விபரம், வாடகை மறு சீரமைப்பு செய்தல், போன்ற விஷயங்களும் உடனடியாக கணக்கெடுக்க வேண்டும், ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்கள் பிரகாரங்கள் முழுதும் கோயிலுக்கு சொந்தமானவை ஆனால் அங்கே ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், விடுதிகள் என்று எந்த ஆதாரமும் இன்றி இயங்கி வருகின்றன, இதற்கெல்லாம் அரசு ஒரு தீர்வை கண்டுபிடிக்க வேண்டும்

Rate this:
23-மார்-201812:18:00 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்இன்றுதான் இந்த பாலா சரியான கருத்தை சொல்லியிருக்கிறார். அதனால் தான் வெயில் காலத்தில் கூட தமிழகத்தில் சில இடங்களில் மழை பொழிகிறது....

Rate this:
வல்வில் ஓரி - koodal,இந்தியா
23-மார்-201814:11:48 IST Report Abuse

வல்வில் ஓரிநல்ல வெயில் காலத்தில் தான் சிலருக்கு மூளை சுறுசுறுப்பாகும்......

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement