மதுரை : 'தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 36 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் உள்ள குளங்கள், மண்டபங்கள் மற்றும் பிரகாரங்களை நன்றாக பராமரிக்க வேண்டும். வணிக நோக்கிலான கடைகளை அகற்ற, அறநிலையத்துறை செயலர், ஆணையர், எட்டு வாரங்களில், சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதை நிறைவேற்றத் தவறும் அலுவலர்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், கோவில் வளாகங்கள் இனி, சுத்தமாகும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
மதுரை, மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில், பிப்ரவரி, 2ல், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், மண்டபத்தின் மேற்கூரை மற்றும் பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. கோவிலில் இருந்த, ஏராளமான கடைகளும் எரிந்து சாம்பலாகின. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இருக்கும் கடைகள் அனைத்தும், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி அகற்றப்பட்டன.
நோட்டீஸ்
இதற்கிடையில், மீனாட்சி அம்மன் கோவிலை தொடர்ந்து, கும்பகோணம், வேலுார் உட்பட, மேலும் சில நகரங்களில் உள்ள கோவில் களிலும் அடுத்தடுத்து தீ விபத்துகள் ஏற்பட்டன. இதனால், தமிழகம் முழுவதும், கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றும்படி,
அதன் உரிமையாளர்களுக்கு, அறநிலைய துறை, 'நோட்டீஸ்' அனுப்பியது.
திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் அடிவாரத்தில், மங்கம்மாள் சத்திரத்தில் உள்ள கடைகளை காலி செய்யும் படி, அறநிலையத்துறை இணை
ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற
மதுரை கிளையில், ஏழு பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
வேதனை
இந்த மனுக்களை தள்ளுபடி செய்து,நீதிபதி, எஸ்.எம்.சுப்பிரமணியம் நேற்று பிறப்பித்த
உத்தரவு:கடவுளை வழிபடவும், அமைதியை தேடியும், கோவில்களுக்கு பக்தர்கள் செல்கின்றனர்.கோவில்களில் நிலவும் சூழ்நிலை, மன வேதனை தருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தால், பாரம்பரிய சின்னங்கள் சேதமடைந்தன. இது, வணிக நோக்கிலான செயல்பாடுகளை அனுமதித்ததற்கு, மோசமான முன்னுதாரணம்.
தனியார் கோவில்களில் நிர்வாகங்கள் சிறப்பாக உள்ளதாகவும், அறநிலையத்துறை கோவில் கள், பக்தர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப இல்லை எனவும், நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்து உள்ளது. அறநிலையத்துறை கட்டுப் பாட்டில், 36 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் உள்ள குளங்கள், மண்டபங் கள், பிரகாரங்களை நன்றாக பராமரிக்க வேண்டும்.
தள்ளுபடி
வணிக நோக்கிலான கடைகளை அகற்ற, உரிய அதிகாரிகளுக்கு, அறநிலையத்துறை செயலர் மற்றும் ஆணையர், எட்டு வாரங்களில், வழி காட்டுதல்களுடன் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதை நிறைவேற்ற தவறும் அலுவலர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றும் வகையில், அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி
வருகின்றனர்.
இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள கோவில் களில் செயல்படும் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டு, கோவில் வளாகங்கள் சுத்தமாகும் என்ற நம்பிக்கை, பக்தர்கள் மத்தியில் உருவாகி உள்ளது.
காலி செய்வது கொள்கை முடிவு
'கோவில்களில் உள்ள கடைகளை, காலி செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற கிளை நேற்று உத்தரவிட்ட நிலையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், திருநெல்வேலி நெல்லையப்பர் உட்பட, பல கோவில்களில் உள்ள கடைகளை காலி செய்ய, அறநிலையத்துறை ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
உடன், அங்குள்ள கடைகளின் உரிமையாளர் கள், 'மாற்று இடம் வழங்க வேண்டும்; நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 'கடைகளை காலி செய்யக்கூடாது' என, இடைக்கால உத்தரவிட்டிருந்தார்.இந் நிலையில், இந்த மனு நேற்று மீண்டும், நீதிபதி பாரதிதாசன் முன், விசாரணைக்கு வந்த போது, அறநிலையத் துறை ஆணையர், பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், 'கோவில்களில் உள்ள கடைகளை காலி செய்வது, அரசின் கொள்கை முடிவு. சில கோவில்கள் தவிர, பெரும்பாலான கோவில் களில், மாற்று இடம் இல்லை. மனுதாரர் களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு வழக்கமான சட்டம், விதிமுறைகள் பொருந்தாது' என, தெரிவித்தார். மனுதாரர்கள் தரப்பு வக்கீல்களும் வாதிட்டனர். பின், விசாரணையை இன்றைக்கு, நீதிபதி ஒத்திவைத்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து