பெங்களூரு, காவிரி நதி நீர் பங்கீடு குறித்து புதிய திட்டம் வகுக்கும்படி, மத்திய அரசை வலியுறுத்த, கர்நாடகாவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரி நதி நீர் விவகாரத்தில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, கர்நாடக முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, சித்தராமையா, மாநிலத்தின் ராஜ்யசபா, லோக்சபா, எம்.பி., க்கள், மத்திய அமைச்சர் களுடன், பெங்களூரில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் டில்லியில்
நடத்திய நான்கு மாநில ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முடிவுகள், கேரளா அரசு தாக்கல் செய்த மறு சீராய்வு மனு ஆகிய விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.
கூட்டத்துக்கு பின், மாநில, நீர்வளத்துறை அமைச்சர், எம்.பி.பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கர்நாடக தரப்பு வக்கீல் ஆலோசனை படி, மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படவில்லை. காவிரி நதி நீர் விஷயத்தில் கட்சி பேதமின்றி ஒற்றுமையாக செயல்படுவதற்கு முடிவு செய்து உள்ளோம்.
மைசூரு, மாண்டியாவுக்கு விவசாயத்துக்கும், பெங்களூருக்கு குடிநீருக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே, நதி நீர் பங்கீடு குறித்து புதிய திட்டம் வகுப்பதற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு அவர்கூறினார்.
காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக, உச்ச
நீதிமன்றத்தில், கேரள அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது; அதில் கூறப்பட்டு உள்ளதாவது:காவிரியில், எங்களுக்கு
கிடைக்கும்,
30 டி.எம்.சி., தண்ணீரில், ஒரு பகுதியை மட்டும், மின் உற்பத்திக்காக பயன்படுத்துகிறோம். மீதியை, கோழிக்கோடு மாநகராட்சி மற்றும் கோழிக் கோடு மாவட்டத்தில் உள்ள, 13 பஞ்சாயத்து களின் குடிநீர் வசதிக்கு பயன்படுத்துகிறோம்.
இப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவால், இந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், எங்களுக்கு வழங்கப்படும், ௩௦ டி.எம்.சி., தண்ணீரை, முன்பு போல் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து