நிவின்பாலி படத்தில் நடனமாடும் பாகுபலி நடிகை | ரம்ஜானுக்கு தள்ளிப்போன மோகன்லாலின் 'நீராளி' | பஞ்சவர்ண தாத்தா-வுக்கு பின் பாதை மாறும் ஜெயராம் | ஆண்டவன் தந்த வாய்ப்பு - அரசியல் மாற்றத்தை உருவாக்குவோம் : ரஜினி | போராட்டம் தொடரும் : தியேட்டர் உரிமையாளர்கள் | உடல் எடை குறைப்பில் சினேகா | திரையுலக ஸ்டிரைக், ரஜினிகாந்த் எதிர்ப்பு ஏன் ? | ரூ.300 கோடி பட்ஜெட்டில் ராஜமவுலியின் அடுத்த படம் | மீண்டும் நீச்சல் உடையில் ராதிகா ஆப்தே | முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தார் அருண்ராஜா காமராஜ் |
டிஜிட்டல் கட்டண கொள்ளையை எதிர்த்து தயாரிப்பாளர்கள் போராடி வருகிறார்கள். கேளிக்கை வரி, லைசென்ஸ் புதுப்பித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தியேட்டர் உரிமையாளர்கள் போராடி வருகின்றனர். இதனால் புதிய படங்கள் வெளியாகாமல், படங்களின் படப்பிடிப்பு நடக்காமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் முடங்கி கிடக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையிலான நிர்வாகிகள், முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் செல்வம், "இரண்டு நாட்களில் அதிகாரிகளுடன் பேசி, தனது கருத்தை தெரிவிப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். சுமூக தீர்வு ஏற்படும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார்.