ஓய்வு பெற்ற மற்றும் தற்போது பணியில் உள்ள, டி.ஜி.பி., உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில், 'ஆர்டர்லி'யாக, எடுபிடி வேலை செய்யும் போலீசார் குறித்த பட்டியல், சமூக வலைதளங்களில் வெளியாவது, அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், போலீஸ்காரர் ஒருவர் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, நீதிபதி, கிருபாகரன், 'அதிகாரிகளின் வீடுகளில், 'ஆர்டலி'யாக எத்தனை போலீசார் பணியாற்று கின்றனர்' என்பது உட்பட, பல கேள்விகளை எழுப்பினார். இதுகுறித்து, நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற, டி.ஜி.பி., ராமானுஜம் மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்கள், போலீஸ் கமிஷனர்களின் வீடுகளில், எடுபிடி வேலை பார்க்கும், போலீசார் குறித்த பட்டியல், சமூக ,
வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
டி.ஜி.பி., அலுவலகத்தில், சட்டம் - ஒழுங்கு, டி.ஜி.பி., துவங்கி, ஏ.ஐ.ஜி., வரையிலான, 15 உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, ஓட்டுனர்கள் மட்டும், 90 பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
அதேபோல, அலுவலக உதவியாளர்களாக, 60 பேர்; முகாம் அலுவலகங்களில், 30 பேர் என435 போலீசார் பணியாற்றி வருகின்றனர்.அதிகாரிகளின் வீடுகளில், சமையல் செய்தல், பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல், நாய் குளிப்பாட்டுவது உள்ளிட்ட பணிகளுக்கு, ஆண் போலீசார், 10 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
அதிகாரிகளின் மனைவியர் ஷாப்பிங் செல்லும் போது, கூடை துாக்குதல், அழகு நிலையத்திற்கு அழைத்து செல்லுதல், குழந்தைகள் பராமரிப்புக்கு என, 5,000 பெண் போலீசார், ஆர்டலியாக உள்ளனர்.
இவர்கள், காவல் நிலையங்களில் பணிபுரிவதாக, உயர் போலீஸ் அதிகாரிகள் பொய் கணக்கு எழுதி, மக்கள் வரிப்பணத்தை, சம்பளமாக பெற்றுத் தரு கின்றனர். அவர்களின் உண்மை முகத்தை, 'வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலை தளங் களில் அம்பலப் படுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பட்டியல் தயாரிப்பு மும்முரம்
போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் நேற்று அனுப்பிய சுற்றறிக்கை:
* ஆர்டர்லி முறை, 1979ல் அழிக்கப்பட்டதாக, அரசு ஆணை உள்ளது. தற்போதும், ஆர்டர்லி முறை உள்ளதா?
* தற்போது பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில் எத்தனை பேர், ஆர்டர்லியாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த எண்ணிக்கையை பட்டியலாக தரவும்
* காவல் துறையில், 10 ஆண்டுகளாக, பணியில் இருந்து விலகியோர்; பணி நீக்கம் செய்யப்பட்டோர்; தற்கொலை செய்து பலியானோர் விபரம் தேவை
* பணியின் போது உயிரிழிந்த போலீசாரின் எண்ணிக்கையை உடனடியாக, அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த சுற்றிக்கையில் கேட்கப்பட்ட தகவல் களை, நேற்று மாலை, 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும் என, டி.ஜி.பி., உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, தகவல்கள் திரட்டப்பட்டு, பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடப்பதாக, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (20)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply