இயக்குனர்-தயாரிப்பாளர் சங்கத்தினர் இடையே வாக்குவாதம் | தமிழக அரசைத் தாக்கும் சித்தார்த் | தமிழ் ராக்கர்ஸ் மனது வைத்தால் சினிமா வாழும் : இயக்குநர் | பழனி முருகன் கோவிலில் மொட்டை போட்ட மலையாள நடிகை | இளையராஜா பெயரில் ஒரு மலையாள படம் | திரையுலக ஸ்டிரைக், எதிராக செயல்பட தயாரிப்பாளர்களுக்கு தூண்டுதல் | நடிகைகளை விளாசிய தயாரிப்பாளரின் மனைவி | நிவின்பாலி படத்தில் நடனமாடும் பாகுபலி நடிகை | ரம்ஜானுக்கு தள்ளிப்போன மோகன்லாலின் 'நீராளி' | பஞ்சவர்ண தாதா-வுக்கு பின் பாதை மாறும் ஜெயராம் |
மலையாளத்தில் சுரேஷ்கோபி, பார்த்திபன் இருவரையும் வைத்து 'மேல்விலாசம்' என்கிற படத்தை எடுத்து சாதனை படைத்தவர் தான் இயக்குனர் மாதவ் ராமதாசன்.. என்ன சாதனை என்றால் வெறும் பத்து, பதினைந்து கேரக்டர்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரே ஒரு கோர்ட் ஹாலில் மொத்தப்படமும் ஒரு விசாரணை (கோர்ட் மார்ஷியல்) வடிவில் நகர்வதாக படமாக்கி இருந்தார் மாதவ் ராமநாதன்.
அதை தொடர்ந்து சுரேஷ்கோபி, ஜெயசூர்யா இருவரையும் வைத்து மருத்துவமனை முறைகேடுகளை மையப்படுத்தி 'அப்போதேகேறி' என்கிற படத்தை இயக்கினார். அடுத்தததாக இப்போது 'இளையராஜா' என்கிற படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றை டைட்டில் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார் மாதவ் ராமநாதன்
சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் ஜெயசூர்யா ஹீரோவாக நடிப்பார் என சொல்லப்படுகிறது. இந்தப்படம் ஏப்ரலில் துவங்க இருக்கிறது.