திரையுலக ஸ்டிரைக், ரஜினிகாந்த் எதிர்ப்பு ஏன் ? | ரூ.300 கோடி பட்ஜெட்டில் ராஜமவுலியின் அடுத்த படம் | மீண்டும் நீச்சல் உடையில் ராதிகா ஆப்தே | முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தார் அருண்ராஜா காமராஜ் | சஸ்பென்சை உடைக்க விரும்பாத சமந்தா | 10 ஆண்டுகளுக்குப்பிறகு முதல்பட நாயகனுடன் இணைந்த காஜல் அகர்வால் | புதிய சாதனை படைத்த 'சர்ரைனோடு' | அவதாரை முந்தும் பிளாக் பேந்தர் | மெர்லின் - பெண்களை தவறாக சித்தரிக்கவில்லையாம் | ஹீரோ ஆசை : நடிகை ஷாக் |
பிரபல பாலிவுட் இயக்குனர் அயன்முகர்ஜி இயக்கி வரும் பிரமாண்ட சூப்பர் நேச்சுரல் படம் பிரமாஸ்திரா. ஆல்யாபட், அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், திவ்யனேடு சர்மா, சந்தா பாண்டே நடிக்கிறார்கள். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ தயாரிக்கிறது.
இதன் படப்பிடிப்புகள் தற்போது பல்கேரியா நாட்டில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஆலியாபட் நடிக்கும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. உயரமான கட்டிடத்தின் மீது நின்று கொண்டு பல்கேரிய சண்டை கலைஞர்களுடன் மோதினார் ஆலியா. பாதுகாப்பிற்காக ஆலியாபட் ரோப் கட்டியிருந்தார். என்றாலும் சண்டைபோடும்போது ஆலியாபட் தவறி விழுந்தார்.
அப்போது ரோப்பின் நீளத்தில் சற்று வித்தியாசம் இருந்தால் தரையில் விழுந்தார். இதில் அவருக்கு தோள் மற்றும் கை ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிக்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆலியாபட் 15 நாள் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.