நிவின்பாலி படத்தில் நடனமாடும் பாகுபலி நடிகை | ரம்ஜானுக்கு தள்ளிப்போன மோகன்லாலின் 'நீராளி' | பஞ்சவர்ண தாத்தா-வுக்கு பின் பாதை மாறும் ஜெயராம் | ஆண்டவன் தந்த வாய்ப்பு - அரசியல் மாற்றத்தை உருவாக்குவோம் : ரஜினி | போராட்டம் தொடரும் : தியேட்டர் உரிமையாளர்கள் | உடல் எடை குறைப்பில் சினேகா | திரையுலக ஸ்டிரைக், ரஜினிகாந்த் எதிர்ப்பு ஏன் ? | ரூ.300 கோடி பட்ஜெட்டில் ராஜமவுலியின் அடுத்த படம் | மீண்டும் நீச்சல் உடையில் ராதிகா ஆப்தே | முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தார் அருண்ராஜா காமராஜ் |
ஒருகட்டத்திற்கு மேல் ஹீரோவாகவே தாக்குப்பிடிக்க முடியாது என்பதால் அவ்வப்போது கேரக்டர் ரோல்களில் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டார் நடிகர் ஜெயராம். சமீபத்தில் வெளியான 'பாகமதி' படத்தில் கூட வில்லனாக நடித்திருந்தார். ஆனால் இதையெல்லாம் தாண்டி இன்னும் வித்தியாச வேடங்களில் தனது திறமையை வெளிப்படுத்த விரும்புகிறார் ஜெயராம்.
அப்படி ஒரு படமாக அவரை தேடிவந்த படம் தான் மலையாளத்தில் தற்போது உருவாகிவரும் 'பஞ்சவர்ண தாத்தா'. ஜெயராம், குஞ்சாக்கோ போபன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இதில் ஜெயராம் பறவைகளை விற்பனை செய்யும் கடை நடத்துபவராக நடித்துள்ளார். அதிலும் வித்தியாசமாக, மொட்டைத்தலை கெட்டப்பில் நடித்துள்ளார்.
“இந்தப்படத்திற்குப்பின் என்னைப்பற்றிய படைப்பாளிகளின் கண்ணோட்டம் வேறுவிதமாக மாறும்.. சினிமாவில் எனது பாதையும் மாறும்” என்கிறார் ஜெயராம்.
கேரளாவில் டிவி சேனல் தொகுப்பாளர்களில் ரொம்பவே பாப்புலரான ரமேஷ் பிஷரோடி என்பவர் இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் டைரக்சன் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார்.