திரையுலக ஸ்டிரைக், ரஜினிகாந்த் எதிர்ப்பு ஏன் ? | ரூ.300 கோடி பட்ஜெட்டில் ராஜமவுலியின் அடுத்த படம் | மீண்டும் நீச்சல் உடையில் ராதிகா ஆப்தே | முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தார் அருண்ராஜா காமராஜ் | சஸ்பென்சை உடைக்க விரும்பாத சமந்தா | 10 ஆண்டுகளுக்குப்பிறகு முதல்பட நாயகனுடன் இணைந்த காஜல் அகர்வால் | புதிய சாதனை படைத்த 'சர்ரைனோடு' | அவதாரை முந்தும் பிளாக் பேந்தர் | மெர்லின் - பெண்களை தவறாக சித்தரிக்கவில்லையாம் | ஹீரோ ஆசை : நடிகை ஷாக் |
அல்லு அர்ஜுன், ரகுல் ப்ரீத், கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடித்து வெளிவந்த தெலுங்குப் படமான 'சர்ரைனோடு' படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யு டியுபில் கடந்த ஆண்டு மே மாதம் வெளியானது. சுமார் 10 மாதங்களுக்குள் அந்த வீடியோ 14 கோடியே 57 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. 5 லட்சம் பேர் அந்த வீடியோவை லைக் செய்துள்ளார்கள். இந்தியாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட ஒரு திரைப்படமாக 'சர்ரைனோடு', புதிய சாதனையைப் படைத்துள்ளது.
அதேசமயம், பாடல்களின் ஆல்பம் வரிசையில், 'கொல வெறி' வீடியோவிற்கு இதுவரை 14 கோடியே 43 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. ஆனால், இந்த வீடியோ யு டியுபில் வெளியாகி 7 ஆண்டுகள் ஆகப் போகிறது. பார்வைகள் எண்ணிக்கையில் 'சர்ரைனோடு', 'கொல வெறி' சாதனையை முறியடித்திருந்தாலும், 'கொல வெறி'யின் லைக் சாதனையான 8 லட்சத்தை இன்னும் தொட முடியவில்லை.
ஆனால், அதிகம் பார்க்கப்பட்ட பாடல் வீடியோவாக 'பத்ரி கா துனியா' டைட்டில் பாடல் 37 கோடியே 57 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் முதலிடத்தில் உள்ளது.