ஆண்டவன் தந்த வாய்ப்பு - அரசியல் மாற்றத்தை உருவாக்குவோம் : ரஜினி | போராட்டம் தொடரும் : தியேட்டர் உரிமையாளர்கள் | உடல் எடை குறைப்பில் சினேகா | திரையுலக ஸ்டிரைக், ரஜினிகாந்த் எதிர்ப்பு ஏன் ? | ரூ.300 கோடி பட்ஜெட்டில் ராஜமவுலியின் அடுத்த படம் | மீண்டும் நீச்சல் உடையில் ராதிகா ஆப்தே | முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தார் அருண்ராஜா காமராஜ் | சஸ்பென்சை உடைக்க விரும்பாத சமந்தா | 10 ஆண்டுகளுக்குப்பிறகு முதல்பட நாயகனுடன் இணைந்த காஜல் அகர்வால் | புதிய சாதனை படைத்த 'சர்ரைனோடு' |
இமயமலை பயணத்தை முடித்து சென்னை திரும்பியுள்ள நடிகர் ரஜினி, மீதமுள்ள மாவட்ட நிர்வாகிகள் தேர்வில் பிஸியாக உள்ளார். இன்று(மார்ச் 21) தென்சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்வு, சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்தது. அப்போது வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசிய ரஜினி...
"தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதே நம் அனைவரின் எண்ணமாக இருக்க வேண்டும். இது ஆண்டவன் கொடுத்த வாய்ப்பு. தூய உள்ளம், எண்ணங்கள் இருந்தால் எதையும் சாதிக்கலாம். தலைமை பதவி கிடைக்காதவர்கள் கோபம், பொறாமை கொள்ளாமல் ஒற்றுமையுடன் மக்கள் நலனே முக்கியம் என அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஆண்டவன் நம்மோடு இருக்கிறான், நான் உங்களுடன் இருக்கிறேன்".
இவ்வாறு ரஜினி பேசினார்.