தமிழக அரசைத் தாக்கும் சித்தார்த் | தமிழ் ராக்கர்ஸ் மனது வைத்தால் சினிமா வாழும் : இயக்குநர் | பழனி முருகன் கோவிலில் மொட்டை போட்ட மலையாள நடிகை | இளையராஜா பெயரில் ஒரு மலையாள படம் | திரையுலக ஸ்டிரைக், எதிராக செயல்பட தயாரிப்பாளர்களுக்கு தூண்டுதல் | நடிகைகளை விளாசிய தயாரிப்பாளரின் மனைவி | நிவின்பாலி படத்தில் நடனமாடும் பாகுபலி நடிகை | ரம்ஜானுக்கு தள்ளிப்போன மோகன்லாலின் 'நீராளி' | பஞ்சவர்ண தாதா-வுக்கு பின் பாதை மாறும் ஜெயராம் | ஆண்டவன் தந்த வாய்ப்பு - அரசியல் மாற்றத்தை உருவாக்குவோம் : ரஜினி |
தமிழ்த் திரையுலகத்தில் நடக்கும் வேலை நிறுத்தம் 20வது நாளைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. நேற்று தான் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அவர்களது கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு முதல்வரைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்கள்.
தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருமானமும் போய்க் கொண்டிருக்கிறது. அது பற்றி அரசு நிர்வாகமும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. இதனிடையே, நடிகரும், தயாரிப்பாளருமான சித்தார்த், தமிழக அரசைத் தாக்கி டுவீட் போட்டுள்ளார். அதில்,
“ஒவ்வொரு படமும், இந்த மிருகத்தனமான சினிமா மார்க்கெட்டில் சரிக்கு சமமான சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஒருவருக்கு மட்டும் இந்த சிறப்பு அனுமதியை மட்டும் வழங்கினால், மற்றவர்களுக்கும் வழங்குங்கள். நாம் அனைவரும் ஒன்று தான். ஒற்றுமை, அனைவரும் சமம் ஆகியவை நமக்குள் இல்லை என்றால் கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.
இந்த தமிழ்நாடு அரசு சினிமாவைப் பற்றி எந்த ஒரு கவலையும் படப்போவதில்லை. பல வருடங்களாகவே இதை அவர்கள் நிரூபித்து வருகிறார்கள். இதைத் திடீரென மாற்றுவது என்பது அவர்களுக்கு அதிசயம். துறையை மாற்றியமைக்க வேண்டும் என்பது அவசியம், ஆனால் எந்த விலையில் ?. முதலில் நம் துறையில் ஒற்றுமையைக் காட்டுவோம். பின்னால் மாற்றம் வரும்,” எனத் தெரிவித்துள்ளார்.