முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தார் அருண்ராஜா காமராஜ் | சஸ்பென்சை உடைக்க விரும்பாத சமந்தா | 10 ஆண்டுகளுக்குப்பிறகு முதல்பட நாயகனுடன் இணைந்த காஜல் அகர்வால் | புதிய சாதனை படைத்த 'சர்ரைனோடு' | அவதாரை முந்தும் பிளாக் பேந்தர் | மெர்லின் - பெண்களை தவறாக சித்தரிக்கவில்லையாம் | ஹீரோ ஆசை : நடிகை ஷாக் | படப்பிடிப்பில் ஆல்யாபட் காயம் | பல்கலைகழகமாகிறது எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனம் | ஆர்யாவுக்கு பெண் தேடும் நிகழ்ச்சிக்கு தடைகேட்டு வழக்கு |
தமிழில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் விளம்பர தூதராக இருக்கிறார் நடிகர் ஆர்யா. அவர் அந்த தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். இது ஒரு நவீன சுயம்வரம் நிகழ்ச்சி.
ஆர்யாவை மணந்து கொள்ள விரும்பும் பெண்கள், அவருடன் கலந்துரையாட வேண்டும். இறுதியில் ஆர்யா தான் விரும்பும் பெண்ணை மணந்து கொள்வார் என்பது இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட். இந்த நிகழ்ச்சி பெண்களை அவமானப்படுத்துவது போன்று இருக்கிறது என்று பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. தற்போது நிகழ்ச்சிக்கு தடைகேட்டு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
தென்மாவட்ட பெண்கள் கூட்டமைப்பின் நிர்வாகி ஜானகி அம்மாள் என்பவர் இந்த நிகழ்ச்சிக்கு தடைகேட்டு மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 19ந் தேதி முதல் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 18 பெண்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். இதில் ஆர்யா திருப்தி அடையும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று தொகுப்பாளர் சங்கீதா அடிக்கடி கூறிவருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பெண்களின் கண்ணியத்துக்கு எதிரான அம்சங்கள் இருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறையை தூண்டும் வகையில் இருக்கிறது. எனவே இந்த நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் அதிகாரி, நடிகர் ஆர்யா, நடிகை சங்கீதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சக செயலாளர், தணிக்கை வாரிய தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.