புதிய சாதனை படைத்த 'சர்ரைனோடு' | அவதாரை முந்தும் பிளாக் பேந்தர் | மெர்லின் - பெண்களை தவறாக சித்தரிக்கவில்லையாம் | ஹீரோ ஆசை : நடிகை ஷாக் | படப்பிடிப்பில் ஆல்யாபட் காயம் | பல்கலைகழகமாகிறது எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனம் | ஆர்யாவுக்கு பெண் தேடும் நிகழ்ச்சிக்கு தடைகேட்டு வழக்கு | கட்சி பர்ஸ்ட், அமெரிக்கா நெக்ஸ்ட்: ரஜினி | நேர்மையான போலீஸாக இருப்பது கஷ்டம் : கார்த்தி | சீனா வெளியீட்டிற்குத் தயாராகிறது 'பாகுபலி 2' |
கடந்த மாதம் வெளிவந்த ஹாலிவுட் படம் பிளாக் பேந்தர். ரெயான் கூல்கர் இயக்கிய இந்தப் படத்தில் சட்விக் போஸ்மென், மைக்கேல் பி.ஜோர்டான், லூபிதா லயோனா உள்பட பலர் நடித்திருந்தனர். மார்வெல் ஸ்டூடியோ தயாரித்திருந்தது. வால்ட் டிஸ்னி வெளியிட்டது. 90 சதவிகிதம் கருப்பின மக்கள் நடித்த படம்.
இதுவரை வெளியான ஹாலிவுட் படங்களின் வசூல் சாதனையை முறியடித்து வருகிறது பிளாக் பேந்தர். வெளியான ஒரு மாதத்திற்குள் 7 ஆயிரத்து 152 கோடி வசூலித்துள்ளது. தொடர்ந்து 5வது வாரமாக பாக்ஸ் ஆபிசில் நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறது பிளாக் பேந்தர். இதன்மூலம் கடந்த 2009-ம் ஆண்டு வெளிவந்த அவதார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை சமன் செய்துள்ளது.
உலக அளவில் மட்டுமல்லாது இந்தியாவிலும் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் 25 கோடி வரை வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் 5 கோடியை எட்டியுள்ளது. சினிமா ஸ்டிரைக் தொடர்வதாலும், வேறு புதிய படங்கள் வெளியாகாததாலும் சென்னை மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் பிளாக் பேந்தர் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது.