கட்சி பர்ஸ்ட், அமெரிக்கா நெக்ஸ்ட்: ரஜினி | நேர்மையான போலீஸாக இருப்பது கஷ்டம் : கார்த்தி | சீனா வெளியீட்டிற்குத் தயாராகிறது 'பாகுபலி 2' | இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கி கவுரவிப்பு | ஒரே மாதத்தில் மூன்று படங்களை முடித்த சமந்தா | சூர்யா படத்தில் புருவ அழகி? | பாதுகாப்பை பலப்படுத்திய சிரஞ்சீவி | காலா சார்ட்டிலைட் உரிமை விற்பனை | ஸ்ரேயா திருமணம் உண்மையே | சமந்தாவுடன் சேர்ந்து யு-டர்ன் அடிக்கும் நரேன் |
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. 2018-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள், கடந்த ஜன., 25-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பத்மவிருதுகள் வழங்கும் விழா, புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று(மார்ச் 20) மாலை நடந்தது. ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கி கவுரவித்தார்.
தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜா, 1976-ம் ஆண்டு அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானானர். அப்போது ஆரம்பித்த ராஜாவின் இசைபயணம், ஆயிரம் படங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.