'அவசர சிகிச்சைப் பிரிவில் சினிமாத் துறை' | தடையை மீறி நடக்கிறதா விஜய் 62 படப்பிடிப்பு? | சென்னை திரும்பினார் ரஜினி | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் இணைந்த நயன்தாரா | ஹிந்தி விக்ரம் வேதா : நோ சொன்ன மாதவன் | நாம் இருவர் நமக்கு இருவர் - சீரியலில் இரட்டை வேடங்களில் செந்தில் | விசாகபட்டினத்தில் உருவான தமிழ் படம் | தமிழில் தயாராகியுள்ள முதல் ஓரின பால் ஈர்ப்பாளர் படம் | அரசியலில் ரஜினிக்கு வெற்றி : தெலுங்கு பஞ்சாங்கம் கணிப்பு |
தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கொண்டு வரும் ஸ்டிரைக் காரணமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் முடங்கி கிடக்கிறது. பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். பல கோடி நஷ்டமாகி உள்ளது.
தற்போதைய சூழலில் ஸ்டிரைக் முடிவுக்கு வராது என தெரிகிறது. இந்த மாதம் முழுக்க நீடிக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது...
“தமிழ் திரைப்படத் துறை தற்போது பலவீனமாகி விட்டது. கிட்டத்தட்ட அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து, அது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறது. விட்டால், அத்துறையின் மொத்த உயிரும் போய் விடும். அதனால், இந்தத் துறையைக் காப்பாற்ற, மத்திய - மாநில அரசுகள் அனைத்து விதமான அவசர சிகிச்சைகளையும் கூடுதல் சிரத்தையுடன் எடுக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக இருந்து, இந்த துறையை காப்பாற்ற போராடுவதோடு, அனைத்துவிதமான உதவிகளையும் ஒருசேர செய்ய வேண்டும்''
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.