துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் காட்டும் அஜித் | நடிகையர் திலகம் ரிலீஸ் தேதி மாற்றம் ஏன்? | மிஷ்கின் - சாந்தனு பட வாய்ப்பு எப்படி? | ரங்கஸ்தலம், சிரஞ்சீவி தந்த அதிர்ச்சி | 'கெட்-அப்' மாற்றிய கமல்ஹாசன் | 'ஏக் தோ தீன்' : ஜாக்குலின் கவர்ச்சி நடனம், கவருமா ? | மிஸ்டர் சந்திரமௌலிக்கு அனுமதி கிடைக்குமா? | சந்தானம் - எம்.ராஜேஷ் பிரிந்தனர்? | திரையுலக பிரச்னை - ஏப்ரல் வரை நீடிக்கும் பிரச்னை | சாவித்ரி வரலாற்று படத்தில் வாரிசுகளை நடிக்க வைக்க முயற்சி |
தென்னிந்திய சினிமாவில் நூற்றுக்கணக்ககான படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பானுப்பிரியா. திருமணத்திற்கு பிறகு கேரக்டர் நடிகையாக உருவெடுத்த பானுப்பிரியா சில படங்களில் அம்மா வேடங்களிலும் நடித்தார். கடைசியாக சிவலிங்கா, மகளிர் மட்டும் படங்களிலும் நடித்தார்.
இந்நிலையில், தற்போது அவர் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் மாறியுள்ளார். இதுவரை தனக்குத்தானே டப்பிங் பேசி வந்துள்ள பானுப்பிரியா, சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள மகாநதி படத்தின் தமிழ்ப்பதிப்பான நடிகையர் திலகம் படத்திற்கு டப்பிங் ஆர்ட்டிஸ்டாகியிருக்கிறார். ஆனால் பானுப்பிரியா அப்படத்தில் இடம்பெற்றுள்ள எந்த கேரக்டருக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது தெரிவிக்கப்படவில்லை.
தற்போது இப்படத்தின் விஎப்எக்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி டப்பிங் வேலைகளும் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.