மிஷ்கின் - சாந்தனு பட வாய்ப்பு எப்படி? | ரங்கஸ்தலம், சிரஞ்சீவி தந்த அதிர்ச்சி | 'கெட்-அப்' மாற்றிய கமல்ஹாசன் | 'ஏக் தோ தீன்' : ஜாக்குலின் கவர்ச்சி நடனம், கவருமா ? | மிஸ்டர் சந்திரமௌலிக்கு அனுமதி கிடைக்குமா? | சந்தானம் - எம்.ராஜேஷ் பிரிந்தனர்? | திரையுலக பிரச்னை - ஏப்ரல் வரை நீடிக்கும் பிரச்னை | சாவித்ரி வரலாற்று படத்தில் வாரிசுகளை நடிக்க வைக்க முயற்சி | மீண்டும் தமிழுக்கு வரும் சாந்தி கிருஷ்ணா | சின்னத்திரையில் அருவி |
சுகுமார் இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் ராம் சரண், சமந்தா, ஆதி, ஜெகபதி பாபு மற்றும் பலர் நடித்துள்ள 'ரங்கஸ்தலம்' படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விழா நேற்று விசாகப்பட்டிணத்தில் நடைபெற்றது.
விழாவில் ராம்சரண் அவரது குடும்பத்தாருடன் கலந்து கொண்டார். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் படத்தின் முக்கியமான திருப்புமுனையைச் சொல்லி படக்குழுவினரை சிரஞ்சீவி அதிர்ச்சியடைய வைத்துவிட்டார்.
ஒரு திரைப்படத்தின் விழாவில் கலந்து கொண்டு பேசுவதென்றால், அந்தப்படம் பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொண்டோ அல்லது படத்தைப் பார்த்து விட்டோ வருவது தான் சிரஞ்சீவியின் வழக்கம். அப்படித்தான் தன், மகன் ராம் சரண் நடித்துள்ள 'ரங்கஸ்தலம்' படத்தையும் அவர் பார்த்துவிட்டார்.
நேற்று நிகழ்ச்சியில் பேசும் போது, படத்தில் ஆதி இறக்கும் காட்சியில் ராம் சரணின் நடிப்பு அவ்வளவு அற்புதமாக இருந்தது என படத்தின் முக்கியமான காட்சி பற்றி வாய் தவறி பேசிவிட்டார். சிரஞ்சீவியின் இந்த பேச்சு படக்குழுவினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இருந்தாலும், படம் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளதால் அந்த பேச்சு படத்தை பாதிக்க வாய்ப்பில்லை.