மிஷ்கின் - சாந்தனு பட வாய்ப்பு எப்படி? | ரங்கஸ்தலம், சிரஞ்சீவி தந்த அதிர்ச்சி | 'கெட்-அப்' மாற்றிய கமல்ஹாசன் | 'ஏக் தோ தீன்' : ஜாக்குலின் கவர்ச்சி நடனம், கவருமா ? | மிஸ்டர் சந்திரமௌலிக்கு அனுமதி கிடைக்குமா? | சந்தானம் - எம்.ராஜேஷ் பிரிந்தனர்? | திரையுலக பிரச்னை - ஏப்ரல் வரை நீடிக்கும் பிரச்னை | சாவித்ரி வரலாற்று படத்தில் வாரிசுகளை நடிக்க வைக்க முயற்சி | மீண்டும் தமிழுக்கு வரும் சாந்தி கிருஷ்ணா | சின்னத்திரையில் அருவி |
ஸ்பைடர் படத்தை அடுத்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்ஜிகே படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் ரகுல் பிரீத் சிங். இந்த படத்தை அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை அடுத்து மீண்டும் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் அவர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் யுகாதி பண்டிகை என்பதால், திருப்பதி கோயிலில் நடிகர் மோகன்பாபு தனது மகன்கள் மஞ்சு விஷ்ணு, மஞ்சு மனோஜ் மற்றும் மகள் மஞ்சு லட்சுமி ஆகியோருடன் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது ரகுல் பிரீத் சிங்கும் அவர்களுடன் இணைந்து திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். மோகன்பாபுவின் மகள் மஞ்சு லட்சுமியும், ரகுல் பிரீத் சிங்கும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.