அமானுஷ்ய கதையை படமாக்கும் ஐஸ்வர்யா தனுஷ் | தமிழில் 3 படங்களில் கமிட்டான ஷிவானி ராஜசேகர் | துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் காட்டும் அஜித் | நடிகையர் திலகம் ரிலீஸ் தேதி மாற்றம் ஏன்? | மிஷ்கின் - சாந்தனு பட வாய்ப்பு எப்படி? | ரங்கஸ்தலம், சிரஞ்சீவி தந்த அதிர்ச்சி | 'கெட்-அப்' மாற்றிய கமல்ஹாசன் | 'ஏக் தோ தீன்' : ஜாக்குலின் கவர்ச்சி நடனம், கவருமா ? | மிஸ்டர் சந்திரமௌலிக்கு அனுமதி கிடைக்குமா? | சந்தானம் - எம்.ராஜேஷ் பிரிந்தனர்? |
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் திரைப்படமாக்கி வருகின்றனர். நாக் அஷ்வின் இயக்கிவரும் இப்படத்திற்கு தெலுங்கில் 'மகாநதி' எனப் பெயரிட்டுள்ளனர்.
நடிகை சாவித்ரியாக கீர்த்தி சுரேஷூம், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். இவர்களோடு சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோரும் நடிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
'நடிகையர் திலகம்' படத்தை மார்ச் 31ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், நடிகை சமந்தாவும், படத்தை தயாரித்துள்ள வைஜெயந்தி மூவீஸ் நிறுவனமும் மே 9-ஆம் தேதி படம் வெளியாகும் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாத்துறையில் நடைபெற்று வரும் ஸ்டிரைக்கை கருத்தில் கொண்டு இப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.