தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் | கீர்த்தி சுரேஷின் மகாநதி ரிலீஸ் தேதி அறிவிப்பு | இடுப்பில் டாட்டூ வரைந்த போட்டோவை வெளியிட்ட சுஷ்மிதாசென் | மீண்டும் அதிரடி நடனத்திற்கு தயாராகும் பிரபு தேவா | ரஜினி, எம்ஜிஆர் முகமூடியை அணிந்தது ஏன்? -கரு.பழனியப்பன் கேள்வி | தமிழில் தொடர்ந்து நடிக்க விரும்பும் காலா பட நாயகி | தெலுங்கு பிக்பாஸ்-2வில் நானி | திட்டமிட்ட பட்ஜெட், காலஅவகாசத்தில் படத்தை முடிப்பது சவால்: அவினாஷ் | கண்ணே கலைமானே படப்பிடிப்பு நிறைவடைந்தது | தமிழில் அறிமுகமாகிறார் அல்லு அர்ஜூன் |
ரஜினிகாந்த், எம்ஜிஆர் முகமூடியை அணிந்து கொண்டு அரசியலுக்கு வருவது ஏன்? என்று இயக்குனர் கரு.பழனியப்பன் கேள்வி விடுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
எம்ஜிஆர் அரசியலுக்கு வரும்போது தனித்தன்மையுடன் வந்தார். ஆனால் ரஜினியோ எம்ஜிஆரின் முகமூடியை அணிந்து கொண்டு அரசியலுக்கு வருகிறார். நீங்கள் ரஜினியாகவே அரசியலுக்கு வாருங்கள்.
மேலும், வெற்றிடத்தை நிரப்ப அரசியலுக்கு வருவதாக சொல்கிறீர்கள். எம்ஜிஆர் வரும்போது எந்த வெற்றிடமும் இல்லை. ஆனால் தனக்கென ஒரு இடத்தை அவர் உருவாக்கிக்கொண்டார்.
அதோடு ஆன்மீக அரசியல் என்றால் சாதி, மத, இன பேதமற்ற அரசியல் என்கிறீர்கள். ஆனால் ஜாதி அரசியலை நடத்தி வரும் ஏ.சி.சண்முகத்தை பக்கத்தில் வைத்துக்கொண்டு இது எப்படி சாத்தியமாகும். இப்படி கூறியுள்ள கரு.பழனியப்பன், நீங்கள் நடித்துள்ள காலா படம் வந்தால் முதல் ஆளாக படம் பார்ப்பேன். நீங்கள் அரசியலுக்கு வாருங்கள், வரவேண்டாம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் என் ஓட்டு யாருக்கு என்பதை நான்தான் முடிவு செய்வேன்.
இவ்வாறு கரு.பழனியப்பன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.