தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் | கீர்த்தி சுரேஷின் மகாநதி ரிலீஸ் தேதி அறிவிப்பு | இடுப்பில் டாட்டூ வரைந்த போட்டோவை வெளியிட்ட சுஷ்மிதாசென் | மீண்டும் அதிரடி நடனத்திற்கு தயாராகும் பிரபு தேவா | ரஜினி, எம்ஜிஆர் முகமூடியை அணிந்தது ஏன்? -கரு.பழனியப்பன் கேள்வி | தமிழில் தொடர்ந்து நடிக்க விரும்பும் காலா பட நாயகி | தெலுங்கு பிக்பாஸ்-2வில் நானி | திட்டமிட்ட பட்ஜெட், காலஅவகாசத்தில் படத்தை முடிப்பது சவால்: அவினாஷ் | கண்ணே கலைமானே படப்பிடிப்பு நிறைவடைந்தது | தமிழில் அறிமுகமாகிறார் அல்லு அர்ஜூன் |
டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். இதனால் தமிழ் சினிமா முடங்கி உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் விஷால் பேசியதாவது...
இப்போது நடந்து கொண்டிருப்பதை ஸ்டிரைக் என்று என்னால் சொல்ல முடியாது. இது தமிழ் சினிமா துறையை புதுபிக்க, திருத்தங்கள் செய்ய, புத்துணர்ச்சியடைய செய்ய நாங்கள் எடுத்துள்ள முடிவு என்று சொல்லலாம்.
ஜிஎஸ்டிக்கு பின் தமிழ் சினிமாவில் இந்த திருத்தங்கள் செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதில், முதலாவது கியூப் பிரச்னை, இதை கியூப் பிரச்னை என்று சொல்லுவதே முதலில் தவறு. DSP (Digital Service Provider) பிரச்னை என்று தான் சொல்ல வேண்டும்.
ஹாலிவுட் படங்களுக்கு DSP குறைந்த கட்டணத்தை தான் வாங்குகிறார்கள். ஆனால், நம்முடைய படங்களுக்கு அதிகமாக வாங்குகிறார்கள். கடந்த 12 ஆண்டுகளாக அதிக கட்டணம் செலுத்தி வருகிறோம். திரையரங்க உரிமையாளர்கள் ஒப்பந்த படிவத்தில் இருந்தவற்றை படிக்காமல் கையெழுத்திட்டுள்ளனர்.
என்னுடைய படம் வெளியாகும் போது என்னுடைய நண்பர் நடித்த படத்தின் டிரைலரை போடவேண்டும் என்றால் முடியவில்லை. ஆனால், அவர்கள் ஜவுளி கடை, நகை கடையின் விளம்பரத்தை ஒளிபரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
கியூப் தாண்டி பல பிரச்சனைகள் இருக்கிறது. தியேட்டரில் டிக்கெட் விற்பனை கம்யூட்டர் மூலம் வர வேண்டும். கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே படத்தின் வசூல் எவ்வளவு, நடிகர்களின் மார்கெட் நிலவரம் என்ன என்று அறிய முடியும். அதை செய்யாமல் நடிகர்கள் சம்பளத்தை குறைக்க சொன்னால் எப்படி முடியும்.
ரூ.150 டிக்கெட் கட்டணம், பார்க்கிங், திண்பண்டங்கள், ஆன்லைன் கட்டணம் என ஒரு குடும்பம் படம் பார்க்க சென்றால் ரூ.800 ஆகிறது. இப்படியிருந்தால் எப்படி படம் பார்க்க வருவார்கள். மினிமம் கேரண்டியில் இனி படம் வேண்டாம்... டிக்கெட் விலை ரூ.80, 50, 30 என்று வையுங்கள்.. பெரிய படங்கள், சின்ன படங்களுக்கு விலை நிர்ணயம் செய்யுங்கள் மக்கள் பலரும் தியேட்டர் வருவார்கள்.
தாணு, அம்மா சிவா, எஸ்ஏ.சந்திரசேகர், நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விவாதிக்க உள்ளோம். இனி தயாரிப்பாளர் சங்கத்தில் படங்களின் ரிலீஸ் தேதி, படங்களின் ஷூட்டிங் நிலவரம் பற்றி அறிவிப்பு ஒட்டப்படும்.
அரசாங்கத்தின் உதவி இல்லாமல் எங்களுக்கு எதுவும் சாத்தியம் இல்லை. அதிக டிக்கெட் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தியேட்டர் டிக்கெட்டுகளை கணினிமயமாக்கும் வரை திரைப்படத்தை வெளியிட மாட்டோம்.
இவ்வாறு விஷால் கூறினார்.