குற்றவாளி! லாலுவுக்கு மேலும் ஒரு சிறைத்தண்டனை வரும் ! Dinamalar
பதிவு செய்த நாள் :
 Lalu Prasad,  Cow fodder Scam,  CBI Special Court,லாலு பிரசாத் ,பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் , மாட்டுத் தீவன ஊழல், சி.பி.ஐ சிறப்பு நீதிபதி ஷிவ் பால் சிங் , ஜெகன்னாத் மிஸ்ரா தவிர, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சிறப்பு நீதிமன்றம் தண்டனை,பீஹார் பிர்சா முண்டா சிறை, 
Bihar former Chief Minister Lalu Prasad, CBI Special Judge Shiv Ball Singh, Jagannath Mishra, Rashtriya Janata Dal, Special Court sentence, Bihar Birsa Munda Prison,

ராஞ்சி: கால்நடைத்தீவனம் வாங்கியதில் அரசு கருவூலத்தில் ரூ.3. 13 கோடி கையாடல் செய்த வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு குற்றவாளி எனவும் அவருக்கு ஆண்டு சிறைத்தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் விதித்து சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே முன்னதாக பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் லாலுவுக்கும் மேலும் ஒரு தண்டனையால் அவரது எதிர்கால அரசியல் கேள்விக்குறியாகியுள்ளது. இன்றைய வழக்கில் 19 பேர் குற்றவாளி எனவும், முன்னாள் முதல்வர் ஜெகன்னாத்மிஸ்ரா 12 பேரை விடுவிப்பதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

 Lalu Prasad,  Cow fodder Scam,  CBI Special Court,லாலு பிரசாத் ,பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் , மாட்டுத் தீவன ஊழல், சி.பி.ஐ சிறப்பு நீதிபதி ஷிவ் பால் சிங் , ஜெகன்னாத் மிஸ்ரா தவிர, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சிறப்பு நீதிமன்றம் தண்டனை,பீஹார் பிர்சா முண்டா சிறை, 
Bihar former Chief Minister Lalu Prasad, CBI Special Judge Shiv Ball Singh, Jagannath Mishra, Rashtriya Janata Dal, Special Court sentence, Bihar Birsa Munda Prison,

பீஹார் முன்னாள் முதல்வர்கள், லாலு பிரசாத்

மற்றும் ஜெகன்னாத் மிஸ்ரா ஆகியோர், தும்கா கருவூலத்தில் இருந்து, 3.13 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட, மாட்டுத் தீவன ஊழலின், நான்காவது வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்ட இந்த தீர்ப்பை, சி.பி.ஐ.,சிறப்பு நீதிபதி, ஷிவ் பால் சிங் இன்று வழங்குகிறார். லாலு பிரசாத் மற்றும் ஜெகன்னாத் மிஸ்ரா தவிர, முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், கால்நடைத்துறை அதிகாரிகள் உட்பட, 29 பேருக்கும் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மாநிலத்தில், 1990களில், கால்நடை தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
போலி பில்கள் கொடுத்து, கருவூலங்களில் இருந்து, 950 கோடி ரூபாய் பணம் எடுத்து, முறைகேடு நடந்தது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்தது.இந்த வழக்குகள், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன.

Advertisement


முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத்துக்கு எதிராக, ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முதல் வழக்கில், லாலுவுக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து, 2013ல் தீர்ப்பு அளிக்கப் பட்டது.இரண்டாவதுவழக்கில், மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து, சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.மூன்றாவது வழக்கில், லாலு பிரசாத் யாதவுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் முதல்வர், ஜெகன்னாத் மிஸ்ராவுக்கும், ஐந்து ஆண்டு சிறை மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், - ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என, 48 பேரும் குற்றவாளிகள் என, சிறப்பு நீதிமன்றம் தண்டனை அறிவித்தது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - koodal,இந்தியா
19-மார்-201808:30:55 IST Report Abuse

வல்வில் ஓரிமூணு கண்ணன் ஒருத்தன் வருவான்....வந்து....இந்த ஆளை பத்தி எடுத்து விடுவான் பாருங்க.....இவரு பின்னால போன ரயில்வே துறையை பிரண்ட் கியர் போட்டு தூக்கினாருன்னு.....அப்போ இவரு பண்ணின ஊழலை எல்லாம் மன்னிச்சி உட்றலாமா ? .தக்காளி...மாட்டுக்கு ..போடுற பருத்தி கொட்டையிலயும் இவன் ஊழல் பண்ணியிருக்கிறார்..இன்னும் என்னென்ன கேவலத்தை இந்த கங்கியும் கூட்டணி கள்ளர்களும் பண்ணி அது வெளிய தெரியாம இருக்கோ....? புள்ளையாரப்பா..இந்த நாட்டை .காப்பாத்து...

Rate this:
C.Elumalai - Chennai,இந்தியா
19-மார்-201808:27:17 IST Report Abuse

C.Elumalaiசாதி,மதம், இனம் பார்த்தா, கொள்ளையடித்தான். கால்நடை உணவில் கைவைத்தவனை, தூக்கிலிடவேண்டும்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-மார்-201808:23:35 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇதை எல்லாம் எதிர்கொள்ள லாலுக்கு பக்குவம் இல்லை... திராவிடர்களிடம் பயிற்சி எடுத்து இருக்கவேண்டும்...

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
19-மார்-201807:37:10 IST Report Abuse

தங்கை ராஜாநீதியும் கூட மதம் பார்க்கும் சாதி பார்க்கும் இனம் பார்க்கும் பணம் பார்க்கும் பதவி பார்க்கும் பவிசு பார்க்கும். லாலு எல்லாத்துலேயுமே பெயிலு.

Rate this:
வல்வில் ஓரி - koodal,இந்தியா
19-மார்-201808:21:49 IST Report Abuse

வல்வில் ஓரிநன்னெறிகளில் பெயிலா போன ஒருத்தன் எல்லாத்திலையுமே பெயிலாதான் போவான்...நீ நீதிக்கு ஒரு சைடு டிராக் போட்டு இந்த களவாணி பயலுக்கு முட்டு கொடுக்கிற பாரு..அது இதை பார்க்கும் நேர்மையான வாசகர் அனைவருக்கும் தெரியும்...இந்த விடயத்தில் மட்டும் இல்லை...உனக்கு லாபமான எல்லா விடயத்திலும் இப்படி தான்..பொது ஜனம் எல்லோரும் பப்பு மாதிரியே இருப்பாங்க..நாம உண்மையை அப்படியே தடம் புரட்டி பொய்யாய் வெளிப்படுத்தினால் அதை தான் நம்புவாங்க ன்னு இன்னும் சின்ன புள்ளை தனமா கருத்து போடாதே...மக்கள் அனைவருமே கெட்டி இப்போ.........

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-மார்-201804:25:52 IST Report Abuse

Kasimani Baskaranஒரே நேரத்தில் தீர்ப்பு சொல்லவேண்டியதுதானே... ஏன் தவணை முறையில் தீர்ப்பு சொல்லி நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறார்கள்?

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-மார்-201803:56:32 IST Report Abuse

J.V. Iyerஅவருடன் சேர்த்து தமிழ் நாட்டில் ஊழல் பண்ணியவங்களையும் உள்ளே வைங்கப்பா. புண்ணியமா போவட்டும்.

Rate this:
Suman - Mayiladuthurai ,இந்தியா
19-மார்-201803:52:03 IST Report Abuse

Sumanசரியான தீர்ப்பு வழங்கி, குற்றம் உறுதி செய்யப்பட்டால் அனைவரையும் உடனடியாக கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் மக்கள் பணத்தை எடுத்திருக்கிறாற்களோ அவகளின் வீர முழக்கம் தாங்க முடியவில்லை. அவர்களது சத்தம் குறையும்

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-மார்-201800:09:43 IST Report Abuse

தமிழ்வேல் எல்லாத்தண்டனைகளையும் தனித்த தனியா செய்யணும்னு ஆணை இடுங்க..

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement