தமிழில் தொடர்ந்து நடிக்க விரும்பும் காலா பட நாயகி | தெலுங்கு பிக்பாஸ்-2வில் நானி | திட்டமிட்ட பட்ஜெட், காலஅவகாசத்தில் படத்தை முடிப்பது சவால்: அவினாஷ் | கண்ணே கலைமானே படப்பிடிப்பு நிறைவடைந்தது | தமிழில் அறிமுகமாகிறார் அல்லு அர்ஜூன் | முழு உடல் பரிசோதனைக்காக: அமெரிக்கா செல்கிறார் ரஜினி | கமல்ஹாசன் கொடுத்த வாக்குறுதி | இறுதிச்சுற்று ஹிந்தி ரீமேக்கில் நடிக்க மறுத்த மாதவன் | ஸ்டிரைக் அல்ல, சினிமாவை புதுப்பிக்க எடுத்த முடிவு : விஷால் | சினிமா ஸ்டிரைக் விவகாரம் : கமலுடன் விஷால் சந்திப்பு |
தெலுங்கு முன்னணி நடிகர்கள் தமிழில் அறிமுகம் ஆகும் சீசன் இது. அந்த வரிசையில் அடுத்து வருகிறார் அல்லு அர்ஜுன். யேவடு, சன் ஆஃப் சத்தியமூர்த்தி, ருத்தரமாதேவி உள்பட பல அல்லு அர்ஜுன் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. அடுத்து அவர் நேரடியாக தமிழுக்கு வருகிறார். அவர் நடிக்கும் "நா பேரு சூர்யா, நா இலு இண்டியா" என்ற தெலுங்கு படம் ஒரே நேரத்தில் தமிழிலும் தயாராகிறது.
இதனை வெக்கந்தம் வம்சி இயக்குகிறார். அல்லு அர்ஜுனுடன் அனு இம்மானுவேல், அர்ஜுன், சரத்குமார், தாக்கூர் அனுப் சிங், நதியா, ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்பட பலர் நடிக்கிறார்கள். ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார், விஷால், சேகர் இசை அமைக்கிறார்கள். ராஜலட்சுமி சினி கிரியேஷன் தயாரிக்கிறது.
இது துப்பாக்கி பாணியிலான தேசப்பற்று கதை. இதில் அல்லு அர்ஜூன் துடிப்பு மிக்க ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். தமிழில் என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தமிழ் வசனம் மற்றும் பாடல்களை பா.விஜய் எழுதுகிறார். ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.