வேலை நிறுத்தப் போரட்டம் மூலம் சரி செய்ய முடியும் : விஷால் | 'காலா' ரிலீஸ் தள்ளிப் போவது ஏன்? | திருட்டு இணையதளங்கள் மீது நடவடிக்கை: விஷால் மகிழ்ச்சி | விஸ்வரூபம் 2 சென்சார் முடிந்தது | குரங்கணி - உயிரிழந்த சென்னை பெண்கள் குடும்பத்தாருக்கு கமல் ஆறுதல் | மீண்டும் இடம் பிடிக்க வரும் அஞ்சலி | மிஷ்கின் படத்தில் நித்யாமேனன், சாய்பல்லவி | ரூ.300 கோடி கிளப்பில் இணைந்த பத்மாவத் | மோகன்லால் - மம்முட்டியை சந்தித்த உலக புகழ் போட்டோகிராபர் | காளிதாஸ் படத்தை ரசிகர்களுடன் தியேட்டரில் பார்த்த நிவின்பாலி |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நடிகர் சங்கப் பொதுச் செயலர் விஷால். அப்படி போட்டிப் போடும் போது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சவாலாக இருக்கும், இணைய தளங்களை முடக்க, அரசுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி, போலீசுடன் சேர்ந்து ஆண்டி பைரசி செல்லை ஏற்படுத்தி, அதை தீவிரமாக செயல்பட வைத்ததன் மூலம், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சவாலாக இருந்து செயல்பட்ட 20க்கும் அதிகமான இணையதளங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஷால் கூறினார்.
இதன் மூலம், திரையிடும் நாளிலேயே, இணைய தளம் வாயிலாக படம் பார்க்கும் நிகழ்வு இனி நடக்காது எனவும் அவர் கூறியிருக்கிறார்.