புதுடில்லி, :''மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்ற தவறிவிட்டது,'' என, காங்., தலைவர் ராகுல் பேசினார்.
காங்கிரஸ் கட்சியின், 84 வது தேசிய மாநாடு, டில்லியில் நடக்கிறது. காங்., தலைவராக, ராகுல் பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் மாநாடு என்பதால், இந்த கூட்டம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில், காங்., தலைவர், ராகுல், முன்னாள் தலைவர், சோனியா, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள், சிதம்பரம், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டில், காங்., தலைவர், ராகுல் பேசிய தாவது:மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, மக்களிடையே வெறுப்புணர்வை பரப்பி வருகிறது. இதன் மூலம், நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. மோடி தலைமையிலான ஆட்சியில், நாட்டு மக்கள் மிகவும் களைப் படைந்து விட்டனர். அவர்களை புத்துணர்வு அடையச் செய்ய வேண்டும் எனில், 2019 லோக்சபா தேர்தலில், காங்., வெற்றி பெற வேண்டும்.
முடங்கி கிடக்கும் இந்தியாவை, காங்கிரஸ் கட்சியால் மட்டுமே எழுச்சி பெறச் செய்ய முடியும். பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. அவர்கள், மக்கள் மத்தியில், கோபத்தையும், வெறுப்புணர்ச்சி யையும் விதைத்து வருகின்றனர்; நாங்களோ, அன்பையும், சகோதரத்துவத்தையும் பரப்புகிறோம்.
இளைஞர்கள் தலைமையில், காங்., புதிய
உத்வேகம் பெற்றுள்ளது. எனினும், மூத்தவர்களின் அனுபவ வழிகாட்டுதல் இன்றி, கட்சி, முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாது. இளைஞர்களின் உத்வேகம், மூத்தவர் களின் வழிகாட்டுதலுடன், காங்.,
புதிய தெம்பு பெற்று, 2019 தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகள்
மேற்கொள்ளப்படும். முந்தைய நாட்களில், இளைஞர்களிடம் வாக்குறுதி அளித்த,
பிரதமர் நரேந்திர மோடி, புதிய வேலை வாய்ப்பு களை உருவாக்க தவறிவிட்டார்.
இதனால், இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். பா.ஜ., அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.இந்த நாடு, அனைத்து மதம், இனத்தைச் சேர்ந்தவர்களுக்கானது. குறிப் பிட்ட ஒரு சிலரின் வளர்ச்சிக்காக, வேறு சிலரை ஒதுக்கவோ, ஒடுக்கவோ கூடாது. ஒவ்வொரு தனி மனிதனின் முன்னேற்றத்திற்காகவும், கட்சி பாடுபடும்.
அனைவருக்கும் முன்னேற்றத்தை தருவோமே தவிர, யாரையும் பின்னுக்கு தள்ள மாட்டோம். நாட்டின் முன்னேற்றத்திற்காக,மக்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும். அந்த செயலை, காங்கிரசின், 'கை'யால் மட்டுமே சாதிக்க முடியும். காங்கிரஸ் கட்சியை, யாராலும் வீழ்த்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
ஆதாரத்துடன் நிரூபிப்போம்!
காங்., தேசிய மாநாட்டில், முன்னாள் தலைவர் சோனியா பேசியதாவது:மக்கள் மத்தியில் ஏராளமான பொய்களை அவிழ்த்துவிட்டு, பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது கூறிய ஒற்றை வாக்குறுதியை கூட, மத்திய அரசு நிறைவேற்றவில்லை. அவர்களின் பொய், பித்தலாட்டங்களை ஆதாரத்துடன் மக்கள் மத்தியில் நிரூபிப்போம். காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்படுத்திய திட்டங்களால், கோடிக்கணக்கான மக்கள் பலன் அடைந்தனர்.
மக்களின்
வாழ்வாதாரம் உயர்ந்தது. ஆனால், பா.ஜ., அரசின் செயல்பாடுகளால், நாட்டு
மக்கள் பெரிதும் சிரமத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி
பேசிய வார்த்தைகள் அனைத்தும், வெறும் வாய் ஜாலங்களே. அவர் அளித்த வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.'அனைவருடனான
வளர்ச்சி' மற்றும் 'ஊழல் செய்ய விடமாட்டேன்' என, மோடி கூறிய அனைத்தும் பொய் என்பதை மக்கள் உணர்ந்து விட்டனர். பா.ஜ., போன்ற மக்கள் விரோத சக்திகளுக்கு, காங்கிரஸ் ஒருபோதும் பணியாது.
தற்போதைய சூழலில், கட்சியை பலப்படுத்து வது மட்டுமே நம் அனைவருக்குமான முக்கிய பணி.இவ்வாறு அவர் பேசினார்.
மீண்டும் ஓட்டு சீட்டு முறை!
'மீண்டும் ஓட்டுச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்' என, காங்., தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இது குறித்து, மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் தேர்தல்களில், மக்கள் அளிக்கும் தீர்ப்பை முறைகேடான வகையில் மாற்றாமல் இருக்க, தற்போதைய மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களுக்கு பதில், பழைய முறையில், ஓட்டுச் சீட்டுகளை பயன் படுத்த வேண்டும்.
தேர்தல் கமிஷன், இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என, மத்திய, பா.ஜ., அரசு கருத்து தெரிவித்துள்ளது. இது, நடைமுறையில் சாத்தியமற்றது. இந்த விவகாரத்தில், ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்று, தேர்தல் கமிஷனில் முறையிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (10+ 191)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply