குரங்கணி - உயிரிழந்த சென்னை பெண்கள் குடும்பத்தாருக்கு கமல் ஆறுதல் | மீண்டும் இடம் பிடிக்க வரும் அஞ்சலி | மிஷ்கின் படத்தில் நித்யாமேனன், சாய்பல்லவி | ரூ.300 கோடி கிளப்பில் இணைந்த பத்மாவத் | மோகன்லால் - மம்முட்டியை சந்தித்த உலக புகழ் போட்டோகிராபர் | காளிதாஸ் படத்தை ரசிகர்களுடன் தியேட்டரில் பார்த்த நிவின்பாலி | சிம்கார்டு இல்லாத செல்போனுடன் வலம்வரும் புருவ அழகி | சோனி நிறுவனத்துடன் கூட்டணி வைத்த பிருத்விராஜ் | அசுரவதம் மீது அசுர நம்பிக்கை வைத்துள்ள மலையாள நடிகர் | சிவகார்த்திகேயன் - ராஜேஷ் புதிய கூட்டணி ? |
சஞ்சாய் லீலா பன்சாலி தயாரித்த பிரமாண்ட படம் பத்மாவத். தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படம் வெளியாவதற்கு முன்பு ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்தது. அதனால் பல மாதங்களாக வெளியாக முடியாமல் தடுமாறி வந்த பத்மாவத் படம் பின்னர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்ததை அடுத்து ஜனவரி 25-ந்தேதி வெளியானது.
ஆனபோதும் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, போன்ற மாநிலங்களில் இப்படம் வெளியாகவில்லை. அதேசமயம், வெளிநாடுகளில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.
அந்த வகையில், நேற்று முன்தினம் பத்மாவத் படம் வசூல்ரீதியாக ரூ.300 கோடியை கிராஸ் பண்ணிவிட்டது. 50 நாட்கள் இந்த வசூலை அடைந்துள்ளது.
ஹிந்தியில் இதற்கு முன்னர் பிகே, பஜ்ரங்கி பைஜான், சுல்தான், தங்கல், டைகர் ஜிந்தா ஹே போன்ற நேரடி ஹிந்தி படங்களுடன் பாகுபலி 2(ஹிந்தி டப்பிங்) படமும் ரூ.300 கோடி கிளப்பில் இணைந்துள்ளன.