சென்னை:திரைத்துறையினர் அறிவித்த, ஸ்டிரைக் காரணமாக, ஐந்து லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
தியேட்டர்களின் டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், 'ஸ்டிரைக்' அறிவித்துள்ளனர். மார்ச் 1 முதல், புதுப்பட வெளியீடு மற்றும் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னனி நடிகர்களின், 40க்கும் மேற்பட்ட படங்கள், பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
வரும்,
23ம் தேதி முதல், வெளியூர் மற்றும் வெளி நாடுகளிலும் படப்பிடிப்பு ரத்து
செய்யப்படும் என, அறிவிக்கப் பட்டுள்ளது.
இதனால், நேரடியாக வும்,
மறைமுகமாகவும் திரைத்துறையில் உள்ள, ஐந்து லட்சம் பேர் வேலைஇழந்துள்ளனர். மேலும், இத்துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ள, 1,000 கோடி ரூபாய் வர்த்தகமும் முடங்கி உள்ளது; தயாரிப்பாளர்கள் பலர் கடனில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 8 சதவீத கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்தல்; மூன்று ஆண்டு களுக்கு ஒரு முறை தியேட்டர் உரிமத்தை புதுப்பித் தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக தியேட்டர்உரிமையாளர்களும் நேற்று முதல், ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன.இந்த ஸ்டிரைக்கில், சென்னை தியேட்டர் உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை.
சென்னையில், தியேட்டர் கள் வழக்கம் போல செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, பாடியில் புதிதாக புனரமைக்கப்பட்ட, சிவசக்தி தியேட்டரில், நேற்று இலவசமாக படங்கள் திரையிடப்பட்டன.இதற்கிடையில், தயாரிப் பாளர்கள் சங்க புகாரை அடுத்து, புதிய படங்களை இணையத்தில் பதிவேற்றிய, 28 இணையதளங்களை காவல் துறை முடக்கி யுள்ளது. இது, தயாரிப்பாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து