குரங்கணி - உயிரிழந்த சென்னை பெண்கள் குடும்பத்தாருக்கு கமல் ஆறுதல் | மீண்டும் இடம் பிடிக்க வரும் அஞ்சலி | மிஷ்கின் படத்தில் நித்யாமேனன், சாய்பல்லவி | ரூ.300 கோடி கிளப்பில் இணைந்த பத்மாவத் | மோகன்லால் - மம்முட்டியை சந்தித்த உலக புகழ் போட்டோகிராபர் | காளிதாஸ் படத்தை ரசிகர்களுடன் தியேட்டரில் பார்த்த நிவின்பாலி | சிம்கார்டு இல்லாத செல்போனுடன் வலம்வரும் புருவ அழகி | சோனி நிறுவனத்துடன் கூட்டணி வைத்த பிருத்விராஜ் | அசுரவதம் மீது அசுர நம்பிக்கை வைத்துள்ள மலையாள நடிகர் | சிவகார்த்திகேயன் - ராஜேஷ் புதிய கூட்டணி ? |
விஜய் தொலைக்காட்சி வில்லா டூ வில்லேஜ் என்ற புதிய நிகழ்ச்சியை இன்று முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9.30க்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
முன்னணி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியின் சாயலில் தயாராகி வரும் நிகழ்ச்சி இது. நகரத்தில் பிறந்து வளர்ந்த 12 இளம் பெண்கள், 40 நாட்கள் கிராமத்தில் வாழ்கிறார்கள். அந்த வாழ்க்கையில் ஏற்படும் சுவாரஸ்யங்கள் தான் நிகழ்ச்சி. இதற்காக அவர்களுக்கு வயல்வேலை செய்தல், மாட்டு வண்டி ஓட்டுதுல், களை எடுத்தல், கதிர் அறுத்தல், பொங்கல் வைத்தல், கிணற்றில் நீர் இறைத்தல். நீண்ட தூரத்தில் இருந்து தண்ணீர் சுமந்து வருதல் என பல டாஸ்கள் கொடுக்கப்படுகிறது. இதனை ஆண்ட்ரூஸ் தொகுத்து வழங்குகிறார். 40 நாட்களை சிறப்பாக நிறைவு செய்யும் பெண்களுக்கு கணிசமான பரிசுத் தொகை காத்திருக்கிறது.