மம்முட்டி கேரக்டரில் வெங்கடேஷ் | வெளியானது திலீப்பின் மூன்றுமுகம் | போதை மருந்து விற்கும் பாவனா? | மோகன்லால் மகனுக்காக துபாயில் ஹீரோயின் தேடல் | நான் ருத்ரன் : சரித்திர படம் இயக்கும் தனுஷ் | கேரளாவில் முகாமிட்டுள்ள பிரபுசாலமன் | சுதீப்பை கவர்ந்த ஆர்யாவின் பர்ஸ்ட் லுக் | கணிதன் ரீ-மேக்கில் சுரபி | தாய்லாந்தில் இந்தியன்-2 கதையை தயார் செய்த ஷங்கர் | ஐதராபாத்திற்கு மாறும் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் |
ரகுமான் நடித்த 'துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், அப்படத்தைத் தொடர்ந்து இயக்கியுள்ள படம் 'நரகாசூரன்'. அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஸ்ரேயா, ஆத்மிகா முதலானோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தை கார்த்திக் நரேனே தயாரித்துள்ளார்.
சிலபல காரணங்களால் நரகாசூரன் படத்தை கௌதம் வாசுதேவ் மேனனும் தயாரித்துள்ளதாக அறிவித்தார்கள். அதுவே இப்போது நரகாசூரன் படத்துக்கு மைனஸாகிவிட்டது.
இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய கார்த்திக் நரேன் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில் நரகாசூரன் படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸை கார்த்திக் நரேனுக்கு தெரியாமல் கௌதம் வாசுதேம் மேனன் விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கெளதம் மேனன் மீது அதிருப்தியில் இருக்கிறார் கார்த்திக்.
நரகாசூரன் படத்தின் தயாரிப்பிலிருந்து கௌதம் வாசுதேவ் மேனனை விலக்கிவிட்டு தானே வியாபாரத்தை முடித்து படத்தை வெளியிட கார்த்திக் நரேன் திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.