ஐதராபாத்திற்கு மாறும் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் | இன்று முதல் ஸ்டிரைக், தீர்வு கிடைக்குமா ? | ரஜினி கட்சியில் இணையும் சவுந்தர்யா | சிம்பன்சி ஞாபகமாவே ஜீவா | கௌதம் மேனனை கழற்றிவிடும் கார்த்திக் நரேன்? | 'மாரி 2', 40 சதவீதம் படப்பிடிப்பு நிறைவு | விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கார் பரிசு, வினியோகஸ்தர்கள் கோபம் | அடுத்த தலைமுறை பெண்களால் மாற்றத்தை தர முடியாது : பி.ஆர்.விஜயலட்சுமி | தங்கைக்கு வாய்ப்பு கிடைக்குமா? | ஒரு கோடி ரூபாயில் பிரமாண்ட, 'செட்' |
ஆசியாவிலேயே முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற பெருமை பெற்றவர், பி.ஆர்.விஜயலட்சுமி; இவர், பழம்பெரும் இயக்குனர் பந்துலுவின் மகள். சினிமாவில், உதவி ஒளிப்பதிவாளராக பணியை துவக்கிய இவர், சின்னவீடு, சிறைப்பறவை உள்ளிட்ட, 22 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இயக்குனராகவும் வெற்றி நடை போடும், விஜயலட்சுமி, பாட்டுப் பாடவா படத்தை அடுத்து, நீண்ட இடைவேளைக்கு பின், அபியும் அனுவும் படத்தை இயக்கியுள்ளார். படம் குறித்தும், தன் திரையுலக அனுபவங்கள் குறித்தும், நம்முடன் அவர் பேசியதிலிருந்து...
நீண்ட இடைவேளைக்கு பின், அபியும், அனுவும் படம் மூலம், இரண்டாவது இன்னிங்சை துவக்கியுள்ளீர்கள்; இந்த அனுபவம் எப்படி இருந்தது?
கடந்த, 1996ல் தான், சினிமாவில் கடைசியாக பணியாற்றினேன். 2001ல், மகன் பிறந்தான். அதன்பின், டிவிக்கு மாறினேன். தற்போது, சரிகம இசை நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருக்கிறேன். படத்தை இயக்க முடிவு எடுத்த போது, சில உண்மைச் சம்பவங்களை ஆலோசித்து, இறுதியில், இந்த படத்தின் கதையை தேர்வு செய்தேன்.
அபியும், அனுவும் படம் எப்படி?
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான வித்தியாசமான காதல் கதை. வழக்கமான காதல் கதையோ, புற்றுநோய் பற்றிய கதையோ அல்ல. சம்பவம் தான், படத்தில் வில்லன். பியா, இதுவரை சீரியஸ் பாத்திரத்தில் நடித்ததில்லை. அதை இந்த படத்தில் சிறப்பாக நிறைவேற்றியுள்ளார்.
படத்திற்காக பியா பாஜ்பாய் நிஜமாகவே மொட்டை போட்டாரா?
நிஜமாக மொட்டை போடவில்லை. இரண்டு காட்சிகள் தான் அப்படி எடுக்க வேண்டும் என்பதால், மும்பையில் உள்ள, மேக் அப் கலைஞர் மூலம் மொட்டை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினோம்.
இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கவில்லையே?
இரண்டு பாட்டு மட்டுமே என்பதால், இந்த படத்திற்கு இசையமைக்க, இளையராஜாவிடம் போகவில்லை. இதற்காக, அவர் என்னை மன்னிக்க வேண்டும். தரண்குமார் இசையமைத்துள்ளார்.
திரைத்துறையில் ஆண்களை போல், பெண் இயக்குனர்கள் பெரிதாக வெற்றி பெற முடியவில்லையே... ஏன்?
அப்படியெல்லாம் இல்லை. அப்படி பிரித்து பார்க்க தேவையில்லை. நிறைய பெண்கள் திரைத்துறைக்கு வருகின்றனர்; சாதிக்கின்றனர். சுதா, லட்சுமி ராமகிருஷ்ணன், சுஹாசினி, சவுந்தர்யா, ஐஸ்வர்யா என, பலர் உள்ளனர். ஆண், பெண் என்ற பாகுபாடு எல்லாம் இல்லை; கதை நன்றாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும். இறுதிச்சுற்று உள்ளிட்ட படங்கள் வெற்றி பெறவில்லையா?
அதிகமாக படம் இயக்குவதில்லையே ஏன்?
அருவி, அறம் போன்ற நல்ல படங்கள் தற்போது வருகின்றன; அதற்கேற்ப, நானும் நல்ல படங்களை தர வேண்டும் என நினைக்கிறேன். நிறைய படம் செய்யாததற்கு காரணம் இதுதான்.
திரைத்துறையில் பெண்களுக்கான மாற்றம் எப்படி?
என் பெற்றோர் காலத்தில், பெண்களால் வெளியே வர முடியவில்லை. எங்கள் காலத்தில் தான் நிறைய மாற்றம் வந்தது. எங்களை போல், எங்களுக்கு பின்னால் வருபவர்களால் பெரிய மாற்றத்தை தர முடியாது. நாங்கள், 150 ஆண்களுடன் சேர்ந்து படித்தோம்; அது, அப்போது பெரிய விஷயமாக இருந்தது; ஆனால், இப்போது அப்படி படிப்பது பெரிய விஷயமாக தெரியவில்லை.