நட்பா, காதலா? : த்ரிஷா பற்றி சிம்பு | மே மாதம் குப்பத்து ராஜா ரிலீஸ் | வரலட்சுமியின் 'வெல்வெட் நகரம்' | விஜய் 62 படத்தில் அறிமுகமாகும் பாலிவுட் பாடகர் | சொகுசு காரை கேரளாவில் பதிவு செய்து அசத்திய பிருத்விராஜ் | இர்பான் கானுக்கு நியூரோஎண்டோகிரைன் டியூமர் நோய் | வெளியீட்டிற்குக் காத்திருக்கும் 30 படங்கள் | அஜித் - போனி கபூர் படம், பரவியது வதந்தியா ? | பைக் மெக்கானிக் ஆன ஜிவி பிரகாஷ் | பதட்டமின்றி படங்களை தேர்வு செய்யும் அருவி அதிதி |
நடிகர் திலீப்புக்கு சொந்தமாக கேரளாவில் சாலக்குடியில் 'டி சினிமாஸ்' என்கிற மல்டிப்ளக்ஸ் தியேட்டர் உள்ளது. ஆனால் இந்த தியேட்டர்களை கட்டுவதற்காக அரசுக்கு சொந்தமான கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார் என திலீப் மீது பொதுநல வழக்கு கடந்த 2015ல் தொடுக்கப்பட்டது.
விசாரணையில் திலீப் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்ததும், போலியான ஆதாரங்கள் தயார் செய்ததையும் சாலக்குடி நகராட்சி உறுதி செய்தது. அதேசமயம் இதற்காக நியமிக்கப்பட்ட விஜிலன்ஸ் அதிகாரிகள், திலீப் எந்த விதமான நில அபகரிப்பிலும் ஈடுபடவில்லை என சமீபத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்.
ஆனால் இந்த அறிக்கையை திருச்சூரில் உள்ள விஜிலன்ஸ் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. மேலும் இந்த வழக்கில் முறையாக எப்.ஐ.ஆர் பதிந்து விரிவான விசாரணை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
நடிகை வழக்கில் நேற்று நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான திலீப்புக்கு, இந்த நில அபகரிப்பு வழக்கும் சேர்ந்து சிக்கலை உண்டாக்கும் என்றே தெரிகிறது.