நட்பா, காதலா? : த்ரிஷா பற்றி சிம்பு | மே மாதம் குப்பத்து ராஜா ரிலீஸ் | வரலட்சுமியின் 'வெல்வெட் நகரம்' | விஜய் 62 படத்தில் அறிமுகமாகும் பாலிவுட் பாடகர் | சொகுசு காரை கேரளாவில் பதிவு செய்து அசத்திய பிருத்விராஜ் | இர்பான் கானுக்கு நியூரோஎண்டோகிரைன் டியூமர் நோய் | வெளியீட்டிற்குக் காத்திருக்கும் 30 படங்கள் | அஜித் - போனி கபூர் படம், பரவியது வதந்தியா ? | பைக் மெக்கானிக் ஆன ஜிவி பிரகாஷ் | பதட்டமின்றி படங்களை தேர்வு செய்யும் அருவி அதிதி |
கிட்டத்தட்ட இசையமைப்பதற்கு குட்-பை சொல்லிவிட்டார் ஜிவி.பிரகாஷ். கை நிறைய படங்களுடன் பிஸி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜிவி, மீதிருந்த அடல்ட் நடிகர் என்ற இமேஜூம், நாச்சியார் படத்திற்கு பின்னர் மாறிவிட்டது. அந்தப்படத்தில் மிக யதார்த்தமாக, அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படமும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.
நாச்சியாரை தொடர்ந்து செம, 100% காதல் படங்களின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கான போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து, அடங்காதே என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜிவி. சுரபி ஹீரோயினாக நடிக்கிறார். சண்முகம் இயக்குகிறார்.
இந்தப்படத்தில், பைக் மெக்கானிக் ரோலில் நடித்திருக்கிறார் ஜிவி.பிரகாஷ். இவரது அண்ணணாக சரத்குமார் நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் விஷயங்கள் தான் படமே என்கிறார் இயக்குநர். காசி, திருச்சி, தென்காசி, சென்னை என பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.