ஐதராபாத்திற்கு மாறும் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் | இன்று முதல் ஸ்டிரைக், தீர்வு கிடைக்குமா ? | ரஜினி கட்சியில் இணையும் சவுந்தர்யா | சிம்பன்சி ஞாபகமாவே ஜீவா | கௌதம் மேனனை கழற்றிவிடும் கார்த்திக் நரேன்? | 'மாரி 2', 40 சதவீதம் படப்பிடிப்பு நிறைவு | விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கார் பரிசு, வினியோகஸ்தர்கள் கோபம் | அடுத்த தலைமுறை பெண்களால் மாற்றத்தை தர முடியாது : பி.ஆர்.விஜயலட்சுமி | தங்கைக்கு வாய்ப்பு கிடைக்குமா? | ஒரு கோடி ரூபாயில் பிரமாண்ட, 'செட்' |
2018ம் ஆண்டில் இதுவரை வெளிவந்த ஒரு படம் கூட அனைவருக்கும் லாபகரமான படமாக அமையவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. ஆனால், சிலர் அவர்களுடைய படங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக தினமும் விளம்பரப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படம் பொங்கலை முன்னிட்டு வெளிவந்தது. ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற 'ஸ்பெஷல் 26' படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தை சுவாரசியமாக கொடுக்கத் தவறியதால் படம் தோல்வியடைந்தது.
இதனிடையே, இப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கு படத்தின் நாயகன் சூர்யா கார் பரிசளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தன் படத்தின் வசூல் பற்றி டிவிட்டரில் பகிர்ந்தவர்கள் மீது வசை பாடினார் விக்னேஷ் சிவன். ஆனால், இப்போதோ படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களே படம் 15 கோடி ரூபாய் நஷ்டம் என அறிவித்துள்ளனர். அவர்கள் சூர்யாவை சந்தித்து நஷ்ட ஈடு கேட்கலாம் என்று இருந்தார்களாம். இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, சூர்யா கார் பரிசளித்திருப்பது வினியோகஸ்தர்களை கோபம் கொள்ள வைத்துள்ளது.
படம் நஷ்டம் என்று தெரிந்தும் சூர்யா, அவருடைய தோல்வியை மறைக்க, இமேஜைக் காப்பாற்ற இப்படி நடந்து கொள்கிறார் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இருந்தாலும் காரைப் பரிசாகப் பெற்ற விக்னேஷ் சிவன், “யார் என்ன சொன்னாலும் அன்பாகவே இருப்போம். விலைமதிப்பில்லா அன்புக்கும் கனிவான எண்ணத்திற்கும் நன்றி சூர்யா சார். என்னைப் போன்ற ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு இது பெரிய உற்சாகத்தைக் கொடுக்கும். உங்களின் இந்த அன்புக்கு நான் தகுதியானவனா என்று தெரியவில்லை. உங்கள் வாய்ப்புக்கு நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.