மீண்டும் ரஞ்சித் - தினேஷ் கூட்டணி | ஐதராபாத்தில் துவங்கும் இந்தியன் 2 | லட்சுமி சிறந்த கலைஞர் என சொல்ல வேண்டும் : லட்சுமி பிரியா | 'பஜ்ரங்கி பைஜான்' சீன வசூல் ரூ.200 கோடி | கிரிக்கெட் பயிற்சிக்கு தயாராகும் துல்கர் சல்மான் | 28 ஆண்டுகள் கழித்து 2-ஆம் பாகத்தில் நடிக்கும் மம்முட்டி | பூமரம் ரிலீஸ் : பூரிப்பில் காளிதாஸ் | ராம் கோபால் வர்மாவை ஓய்வு பெற சொன்ன ராதிகா ஆப்தே | காமெடி கலந்த கதாநாயகியாக அதிதி மேனன் | மீண்டும் எடையை குறைக்கும் ஜூனியர் என்டிஆர் |
பட்டதாரி படத்தில் நடித்தவர் அதிதிமேனன். அதன்பிறகு ஆர்யா இயக்கத்தில் அமீர் இயக்கிய சந்தனத்தேவன் படத்தில் நடித்தார். அந்தபடம் பாதிக்கு மேல் வளர்ந்த நிலையில் கிடப்பில் உள்ளது. இந்த நிலையில, தற்போது அட்டகத்தி தினேஷ் நடித்து வரும், களவாணி மாப்பிள்ளை என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் அதிதி மேனன்.
இந்த படத்தில் தனது வேடம் குறித்து அவர் கூறுகையில், இந்த களவாணி மாப்பிள்ளை படம் பக்கா கமர்சியல் கதையில் உருவாகிறது. ரொமான்டிக் காமெடி படம். கிராமம், நகரம் இரண்டு கலந்த கதை கொண்டது. இப்படத்தில் அட்டகத்தி தினேசுக்கு ஜோடியாக நடிக்கிறேன். எனக்கு அப்பா அம்மாவாக ஆனந்தராஜ் - தேவயானி நடிக்கிறார்கள்.
படத்தில் காதல் காட்சிகளை விட காமெடி காட்சிகள் தான் அதிகமாக உள்ளது. முதல்முறையாக இந்த படத்தில் நான் நிறைய காமெடி காட்சிகளிலும் நடித்து வருகிறேன். அட்டகத்தி தினேஷ், மொட்டை ராஜேந்திரன் காம்பினேசனில் நான் நடித்துள்ள காமெடி காட்சிகள் ரொம்ப நன்றாக வந்துள்ளது. படம் தியேட்டருக்கு வரும்போது ரசிகர்கள் ரசிப்பார்கள்.
ஆனந்தராஜ், தேவயானி இருவரும் எனக்கு பலமாக அமைந்தார்கள். காரணம், அவர்கள் நடிப்பில் பெரிய அனுபவசாலிகள். அதனால் அவர்களுடன் நடிக்கும்போது எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார்கள் என்கிறார் அதிதி மேனன்.