மீண்டும் ரஞ்சித் - தினேஷ் கூட்டணி | ஐதராபாத்தில் துவங்கும் இந்தியன் 2 | லட்சுமி சிறந்த கலைஞர் என சொல்ல வேண்டும் : லட்சுமி பிரியா | 'பஜ்ரங்கி பைஜான்' சீன வசூல் ரூ.200 கோடி | கிரிக்கெட் பயிற்சிக்கு தயாராகும் துல்கர் சல்மான் | 28 ஆண்டுகள் கழித்து 2-ஆம் பாகத்தில் நடிக்கும் மம்முட்டி | பூமரம் ரிலீஸ் : பூரிப்பில் காளிதாஸ் | ராம் கோபால் வர்மாவை ஓய்வு பெற சொன்ன ராதிகா ஆப்தே | காமெடி கலந்த கதாநாயகியாக அதிதி மேனன் | மீண்டும் எடையை குறைக்கும் ஜூனியர் என்டிஆர் |
இந்தியத் திரைப்படங்கள் சீனாவில் வசூலை வாரிக் குவித்து வருவது தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆமீர் கான் நடித்த 'தங்கல்' படம் சீனாவில் வெளியாகி 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது. அடுத்து சல்மான் கான் நடித்து சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'பஜ்ரங்கி பைஜான்' படம் சீனாவில் கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி வெளியானது.
இரண்டு வார காலத்திற்குள் அந்தப் படத்தின் வசூல் 200 கோடியைத் தொட உள்ளது. மூன்று ஆண்டு கழித்து ஒரு படம் வெளியாகி இப்படி ஒரு சாதனையைப் படைப்பதைக் கண்டு ஹிந்தித் திரையுலகினர் ஆச்சரியப்பட்டுள்ளனர். சீனாவில் சுமார் 8000 தியேட்டர்களில் 'பஜ்ரங்கி பைஜான்' வெளியானது. ஒரு வாரத்திற்குள்ளாகவே 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்தது.
கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கரீனா கபூர், நவாசுதீன் சித்திக் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சீனாவில் அடுத்தடுத்து ஹிந்திப் படங்களை வெளியிடும் திட்டத்தில் பலரும் உள்ளனர். பெரிய நடிகர்களின் படங்களுக்கு அங்கு தொடர்ந்து நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.