ராதிகா ஆப்தே அறைந்த நடிகர் யார் ? | ஹிந்திக்குப் போகும் 'விக்ரம் வேதா', அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பிரபாஸ்க்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | ஆர்.கண்ணன் கடும் அதிர்ச்சி | மலையாளத்தில் பிசியாகும் கணேஷ் வெங்கட்ராம் | அஜித்தை அசர வைத்த இமான் | வெள்ளிக்கிழமை வழக்கம் போல் தியேட்டர்கள் இயங்கும்: அபிராமி ராமநாதன் | நடிகர் விக்ரம் குடும்பத்திலிருந்து மின்னவரும் புதிய கதாநாயகன் | மம்முட்டி படத்தில் வில்லனாக காளகேயா பிரபாகர் | திலீப் ஜோடியாக ஊர்வசி..? |
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்தார் கணேஷ் வெங்கட்ராம். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படங்கள் வரவில்லை. எனவே மற்ற மொழிப்படங்களில் நடிக்க போய்விட்டார்.
'மை ஸ்டோரி' என்ற மலையாளப்படத்தில் பிருத்திவிராஜுடன் இணைந்து நடித்துள்ளார் கணேஷ் வெங்கட்ராம். இந்தப்படத்தில் பூ, மரியான் படங்களில் நடித்த பார்வதி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் கணேஷ் வெங்கட் ராமுக்கு இரண்டாவது கதாநாயகன் வேடம். ரோஷினி தினகர் இயக்கும் இந்த படம் மிக விரைவில் வெளியாகவிருக்கிறது.
ஏற்கெனவே 'கந்தஹர்' என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார் கணேஷ் வெங்கட் ராம். 'கந்தஹர்' படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்த கணேஷ் வெங்கட் ராம், இப்போது நடித்து வரும் 'மை ஸ்டோரி'யில் பிருத்விராஜ் உடன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் ஒரு மலையாளப்படத்தில் தனி கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.