புதுடில்லி : வங்கி மோசடி செய்து, வெளிநாடு தப்பிச் சென்றுள்ள பிரபல வைர வியாபாரிகள், நிரவ் மோடி மற்றும் அவருடைய மாமா, சோக்சியை கைது செய்ய, 'இன்டர்போல்' எனப்படும், சர்வதேச போலீசின் உதவியை நாடுகிறது, அமலாக்கத் துறை.
பஞ்சாப் நேஷனல் வங்கியில், அதிகாரிகளின் உதவியுடன், 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக,
வைர வியாபாரிகள், நிரவ் மோடி, மெஹுல் சோக்சி ஆகியோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், இதில் நடந்துள்ள பண மோசடி குறித்து, அமலாக்கத் துறைவழக்கு பதிவு செய்துள்ளது. விசாரணைக்கு ஆஜராகாததால், மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது.
அதன்படி, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள நிரவ் மோடி மற்றும் சோக்சிக்கு எதிராக, கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து, ஐரோப்பிய நாடான, பிரான்சின், லியோன் நகரை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'இன்டர்போல்' உதவியுடன், அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில், அமலாக்கத் துறை ஈடுபட்டுள்ளது.
இருவருக்கும் எதிராக, 'ரெட் கார்னர் நோட்டீஸ்' எனப்படும், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க, இன்டர்போலை வலியுறுத்தும்படி, சி.பி.ஐ.,யை, அமலாக்கத் துறை கேட்டுள்ளது.மத்திய புலனாய்வு அமைப்பு என்பதால், சி.பி.ஐ., மட்டுமே, 'இன்டர்போல்' அமைப்புடன் தொடர்பு கொள்ள முடியும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து