ராம் கோபால் வர்மாவை ஓய்வு பெற சொன்ன ராதிகா ஆப்தே | காமெடி கலந்த கதாநாயகியாக அதிதி மேனன் | மீண்டும் எடையை குறைக்கும் ஜூனியர் என்டிஆர் | ஜூன் மாதம் சூர்யாவின் என்ஜிகே டீசர் | கடும் கோபத்தில் சாய் பல்லவி | 'அறம்', தெலுங்கு ரீமேக்கிற்கு எதிர்பார்ப்பு | அச்சு அசலாக சாவித்ரி, ஜெமினி கணேசன் | ராதிகா ஆப்தே அறைந்த நடிகர் யார் ? | ஹிந்திக்குப் போகும் 'விக்ரம் வேதா', அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பிரபாஸ்க்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே |
கௌதம் கார்த்திக் நடித்த 'இவன் தந்திரன்' படத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டார் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்.கண்ணன். இவன் தந்திரன் ரிலீஸ் செய்யப்பட்ட நான்காவது நாளே ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டது. அதனால் கண்ணனுக்கு சில கோடி நஷ்டம் ஏற்பட்டது.
இவன் தந்திரன் படத்தைத் தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கி தயாரித்து வரும் படம் 'பூமராங்'. அதர்வா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், மேகா ஆகாஷ், உபன் பட்டேல், 'மேயாத மான்' படப் புகழ் இந்துஜா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு 95 சதவிகிதம் முடிவடைந்த நிலையில் இன்னும் 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கியுள்ளது. இந்நிலையில் மார்ச் 16 முதல் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறார் ஆர்.கண்ணன்.
15 நாட்களில் படத்தை முடித்துவிட திட்டமிட்ட கண்ணன் தற்போது ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டதால் அதர்வாவின் கால்ஷீட் மறுபடியும் கிடைக்க 3 மாதங்களாகும் என்று தெரிவித்ததோடு, தனக்கு விதிவிலக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் உடன்படவில்லை.
எனவே தயாரிப்பாளர் சங்கத்தினால் மீண்டும் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் ஆர்.கண்ணன்.